For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒய்ட்பீல்டை காப்பாற்றுங்கள்.. பெங்களூரில் வீதிக்கு இறங்கி போராடிய ஐடி, பிடி ஊழியர்கள்

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூர்: ஒய்ட்ஃபீல்டு பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என்று கூறி ஐடி, பிடி ஊழியர்களும் பொதுமக்களும் பெரும் போராட்டம் நடத்தியுள்ளனர்.

பெங்களூரின் புறநகர் பகுதியிலுள்ளது, ஒய்ட்ஃபீல்ட். இங்கு ஐடி நிறுவனங்கள் அதிகம் குவிந்துள்ளது. இதனால், ஒய்ட்ஃபீல்ட், பகுதியை சுற்றிலும் அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் அதிகம் ஆகியுள்ளன.

‘Save Whitefield’ campaign in Bangalore

ஆனால், சாலை, கழிவு நீர் அகற்றும் வசதிகளை அதற்கு ஏற்ப செய்யவில்லை. இதனால் டிராபிக் நெரிசல், அதிகரித்துவிட்டது. சாலை ஓட்டை உடைசலாகிவிட்டது.

இதனால், ஒய்ட்ஃபீல்ட் பகுதியில் பணியாற்றும் ஐடி, பிடி நிறுவனங்களின் ஊழியர்களும், அந்த பகுதி மக்களும் இணைந்து, இன்று போராட்டம் நடத்தினார்கள். சுமார் 10 ஆயிரம் பேர் இதில் பங்கேற்றனர்.

savewhitefield, என்ற வாசகம் அடங்கிய பதாகைகளை தூக்கியபடி பெரும் மனித சங்கிலி நடத்தினர். சமூக வலைத்தளங்களிலும், அதுபோல ஹேஷ்டேக் உருவாக்கி கவனம் ஈர்த்தனர்.

English summary
Some took a day off from work, and a few others worked around their job timings, all for one cause. Some were residents, some others employees of firms located in and around Whitefield. And they all had one thing to say: they were tired of suffering and complaining.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X