ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்துக்கு எதிரான வழக்கு- மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஜம்மு காஷ்மீருக்கு அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவின் கீழ் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படுகிறது. இந்த 370-வது பிரிவையும் ஜம்மு காஷ்மீருக்கு தனி அரசியல் சாசனம் என்பதையும் சட்டவிரோதம் என அறிவிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை இன்று நடபெற்றது.

SC notice to Centre on plea challenging special status to J&K

இந்த வழக்கில் பதிலளிக்க மத்திய அரசு உள்ளிட்ட பல தரப்பினருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டும் என ஏற்கனவே பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கம் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

காஷ்மீர் பனிச்சரிவு, தமிழக ராணுவ வீரர் | Kashmir Avalanche, TN soldier - Oneindia Tamil

ஆயிரத்தில் ஏன்? லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள், தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்!

English summary
The Supreme Court has issued issued notices to the Centre among others on a plea that challenged the special status accorded to Jammu and Kashmir under Article 370 of the Indian Constitution.
Please Wait while comments are loading...
வேலைவாய்ப்புகள்