For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கன மழையால் வெள்ளத்தில் மிதக்கிறது மும்பை.. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. விமான நிலையம் மூடல்

By Veera Kumar
Google Oneindia Tamil News

மும்பை: மும்பையில் பெய்து வரும் கன மழை காரணமாக அந்நகரிலுள்ள சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு விமானங்கள் சென்னை உள்ளிட்ட பிற நகரங்களுக்கு திருப்பிவிடப்பட்டன.

மும்பையில் கடந்த சில நாட்களாக கன மழை கொட்டி வருகிறது. இதனால் மும்பை நகரமே வெள்ளத்தில் தத்தளித்து வருகிறது. மோசமான வானிலை மற்றும் ஒடுபாதை சரியில்லாத காரணத்தால் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக நேற்று மும்பையில் உள்ள பள்ளி கல்லூரிகள் செல்படாத நிலையில் இன்றும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Schools to be shut today, flights hit due to MumbaiRains

இரவு முழுக்க பெய்த கன மழையால் பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அந்நகரிலுள்ள சத்ரபதி சிவாஜி, சர்வதேச விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு விமானங்கள் சென்னை, கோவா, பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத் விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன. இதுவரை 56 விமானங்கள் திருப்பிவிடப்பட்டுள்ளன.

மேற்கு ரயில்வே 5 ரயில்களை ரத்து செய்துள்ளது. பகல் 12 மணியளவில் மும்பை கடலில் பிரமாண்ட அலைகள் எழும் வாய்ப்புள்ளது.

English summary
Massive waterlogging in various parts of Mumbai. In heavy MumbaiRains, schools to be shut today, flights hit.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X