For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியா-பாக். பதற்றம்.. எல்லை மாவட்டங்களில் காலவரையின்றி பள்ளிகள் மூடல்: பஞ்சாப் அரசு அறிவிப்பு

Google Oneindia Tamil News

சண்டிகர்: இந்திய விமானப்படைத் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தான் தரப்பிலிருந்து தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சத்தால் பஞ்சாப் மாநிலத்தில் எல்லையோரப் பகுதிகளில் உள்ள பள்ளிகள் அனைத்தும் காலவரையின்றி மூடுவதற்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் யூரி பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதில் கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் இன்று அதிகாலை பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து, பஞ்சாப் எல்லையில் பதற்றம் நிலவி வருவதால் அந்தப் பகுதிகளில் உள்ள பள்ளிகள் அனைத்தையும் அம்மாநில அரசு மூட உத்தரவிட்டுள்ளது.

Schools of India-Pak Border in Punjab Ordered To Close

இதனையடுத்து, பஞ்சாப் எல்லை பகுதியில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. மேலும் மீண்டும் அறிவிப்பு வரும் வரை பள்ளிகள் திறக்கப்பட மாட்டாது என்று பஞ்சாப் மாநில பெரோஸிப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

English summary
All school within 10 km of India-Pak border have been closed down by Punjab government.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X