For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சம்பக்குளம் மூலம் படகுப் போட்டி… வளைந்து நெளிந்து செல்லும் வள்ளம் களி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

கேரளா மாநிலத்திற்கும் படகுப் போட்டிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நீர் நிறைந்த தேசமான கேரளாவில் ஒணம் பண்டிகையின் நிகழ்வின் போது படகுப் போட்டி நடத்தப்படும். அதே போல ஆகஸ்ட் மாதம் இரண்டாவது வாரத்திலும் நேருகோப்பை படகுப் போட்டி நடைபெறுவது வாடிக்கை

ஆலப்புழா மாவட்டம் சம்பக்குளத்தில் ஆண்டு தோறும் ஆனி மாதம் மூலம் நட்சத்திரத்தில் படகுப் போட்டி நடைபெறுகிறது. நேற்றைய தினம் மூலம் நட்சத்தினை முன்னிட்டு நூறு அடி நீளமுள்ள படகுகள் நீரில் சீறிப் பாய்ந்து சென்றது பார்வையாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

சம்பக்குளம் வள்ளம்களி அல்லது படகுப் போட்டி, மாநிலத்தில் புகழ்பெற்ற படகு போட்டிகளுள் ஒன்றாகும். இந்தப்படகுப் போட்டியின் சிறப்பம்சம் நீர் மிதவைகள் அலங்கரிக்கப்பட்ட படகுகள், ரீகல், சுண்டன்வள்ளம் (பாம்பு படகுகள்) ஆகியவையாகும்.

ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும் நேரு கோப்பை படகுப் போட்டியைப் போல இந்த சம்பக்குளம் படகுப்போட்டியும் சிறப்பு வாய்ந்தது. அம்பலப்புழா நகரில் உள்ள கோவிலில் இந்து கடவுளான கிருஷ்ணன் பிரதிஷ்டை செய்யப்பட்டதனை நினைவு கூறும் விதமாக 400 ஆண்டுகளாக இந்தப்படகுப் போட்டி நடைபெறுவதாக சிறப்பு விருந்தினராக பங்கேற்ற எம்.பி கொடுங்குனில் சுரேஷ் கூறினார். இந்தப்படகுப் போட்டியை துவக்கியது சம்பக்குளம் கிராமத்தைச் சேர்ந்த கிருஸ்துவக்குடும்பத்தினர்தான் என்றும் அவர் தெரிவித்தார்.

நூற்றுக்கணக்கோனோர் ஒரே நேரத்தில் துடுப்புகள் போட்டு செலுத்தியதும் நீரின் மீது பாம்புப்படகுகள் படகுகள் நீந்தி சென்றதும். பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது.

English summary
The season of boat races in Kerala has begun with the Champakulam Moolam boat race.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X