For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போலி பாஸ்போர்ட் வழக்கில் தாதா அபு சலீமுக்கு 7 ஆண்டு சிறை

By Siva
Google Oneindia Tamil News

Seven-year jail to Abu Salem in fake passport case
ஹைதராபாத்: போலி பாஸ்போர்ட் வழக்கில் தாதா அபு சலீமுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

1993ம் ஆண்டு மும்பையில் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையவன் தாதா அபு சலீம். அவன் கடந்த 2001ம் ஆண்டு போலியான ஆவணங்கள் கொடுத்து ஹைதராபாத்தில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் தனக்கு, தனது மனைவி மற்றும் காதலி மோனிகா பேடி ஆகியோருக்கு பாஸ்போர்ட் வாங்கினான். அவன் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் வசிப்பது போன்று போலியான ஆவணங்களை சமர்பித்தான்.

அவன் ராமில் காமில் மாலிக் என்ற பொய்யான பெயரில் பாஸ்போர்ட் பெற்றான். இது குறித்த வழக்கு ஹைதராபாத்தில் உள்ள சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் கடந்த 2009ம் ஆண்டு முதல் நடந்து வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

போலியான ஆவணங்களை அளித்து பாஸ்போர்ட் பெற்ற அபு சலீமுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. போலி பாஸ்போர்ட் வழக்கில் சலீம், மோனிகா பேடி உள்பட 10 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. விசாரணைக்குட்படுத்தப்பட்ட 7 பேரில் 2 பேர் விடுவிக்கப்பட்டனர். பேடி உள்பட 3 பேர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர்.

இந்த வழக்கில் சலீமையும் சேர்த்து மொத்தம் 5 பேருக்கு தண்டனை கிடைத்துள்ளது.

English summary
A special CBI court in Hyderabad has awarded seven year imprisonment to the gangster Abu Salem in fake passport case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X