For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எதிராக கருத்து போட்ட இளைஞர், லைக்- கமெண்ட் போட்ட 8 பேர் கைது

By Mathi
Google Oneindia Tamil News

அலகாபாத்: சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எதிராக கருத்துகளைப் பதிவிட்டதாக 7 இளைஞர்களை உத்தரப்பிரதேச போலீசார் கைது செய்துள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தின் பரைச்சில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஷாரிக் கான் தலைமையில் போலீசில் ஒரு புகார் கொடுக்கப்பட்டது. அதில் முஸ்லிம்களுக்கு எதிராக சமூக வலைதளங்களில் சிலர் தொடர்ந்து அவதூறு கருத்துகளை பரப்பி வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

Seven Youth Arrested For Posting Anti-Muslim Post Of Facebook

இந்தப் புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறை கண்காணிப்பாளர் நேகா பாண்டே, முஸ்லிம்களுக்கு எதிராக கருத்தை பதிவு செய்த விபுல் சிங் என்பவர் உட்பட 7 பேரை கைது செய்தனர்.

இதில் விபுல்சிங் பதிவு செய்திருந்த கருத்துக்கு லைக் மற்றும் கமெண்ட்ஸ் போட்டவர்களும் அடங்குவர் என்பதும் குறிப்பிடத்தக்கது., இவர்கள் அனைவர் மீதும் ஐ.பி.சி. 153B, 295A, 504 ஆகிய பிரிவுகளின் கீழும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

English summary
Seven youths were booked on Wednesday for allegedly hurting religious sentiments by posting objectionable content on social networking site Facebook in UP.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X