For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மனைவியின் சம்மதம் இல்லாமல் உறவு கொண்டால் அது பலாத்காரம் ஆகாது: மத்திய அரசு

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: 15 வயதுக்கு மேற்பட்ட மனைவியுடன் கணவன் உறவு கொள்வது பலாத்காரம் ஆகாது என்று மத்திய அரசு டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஆர்.ஐ.டி. பவுன்டேஷன் என்ற என்.ஜி.ஓ. டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தது. அந்த மனுவில் அது கூறியிருந்ததாவது,

Sexual Intercourse By Man With Wife Not Rape, Centre Tells High Court

திருமணமான பெண்ணை சம்மதம் இல்லாமல் உறவு கொள்ள சட்டம் அனுமதி அளிக்கிறது. இது மனைவியின் உரிமையை மீறுவது ஆகும். சட்டம் 375ன்படி 15 வயதுக்கு மேற்பட்ட திருமணமான பெண்ணுடன் அவரின் சம்மதம் இல்லாமல் கணவன் உறவு கொண்டால் அது பலாத்காரம் ஆகாது என்று உள்ளது. இந்த சட்டத்தை மாற்ற வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி ஜி. ரோஹினி மற்றம் நீதிபதி சங்கீதா திக்ரா ஷாகல் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் இது குறித்து விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

அதற்கு அரசு தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது,

நம் நாட்டில் குழந்தை திருமணம் ஊக்குவிக்கப்படவில்லை. நம் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சமூக, பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சி சமமாக இல்லை. குழந்தை திருமணங்கள் இன்னும் நடக்கத் தான் செய்கின்றன.

15 வயதுக்கு மேற்பட்ட மனைவியுடன் கணவன் உறவு கொள்வது பலாத்காரம் ஆகாது.

English summary
The Union government today defended, before the Delhi High Court, the Indian Penal Code provision that says sexual intercourse by a man with his own wife, who is not under 15 years of age, is not rape.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X