For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக ஆளுநராக கர்நாடகா மூத்த பாஜக தலைவர் டி.ஹெச். சங்கரமூர்த்தி விரைவில் நியமனம்?

By Mathi
Google Oneindia Tamil News

பெங்களூர்: தமிழகத்தின் புதிய ஆளுநராக கர்நாடகா மாநில மூத்த பாரதிய ஜனதா தலைவரான டி.ஹெச். சங்கரமூர்த்தி நியமிக்கப்படக் கூடும் என டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக ஆளுநர் ரோசய்யாவின் பதவிக் காலம் இந்த மாதம் 31-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் புதிய ஆளுநர் யாராக இருக்ககக் கூடும் என தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

Shankaramurthy likely to be made TN governor

மத்திய அமைச்சரவையில் இருந்து விலகிய நஜ்மா ஹெப்துல்லா, குஜராத் முதல்வர் பதவியில் இருந்து விலகிய ஆனந்திபென் படேல் உள்ளிட்ட பலரது பெயர்களும் அடிபட்டன. தற்போது கர்நாடகா மாநில மூத்த பாஜக தலைவர் டி.ஹெச். சங்கரமூர்த்தி நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

சங்கரமூர்த்தி, தற்போது கர்நாடகா சட்டமேலவையின் தலைவராக உள்ளார். 1966-ம் ஆண்டு முதல் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறார். மிசா காலத்தில் பெல்காம் சிறையில் 19 மாதம் அடைக்கப்பட்டிருந்தார்.

1988-ம் ஆண்டு முதல் கர்நாடாக சட்டமேலவை உறுப்பினராக இருக்கிறார். அம்மாநில உயர்கல்வித் துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். சட்டமேலவையில் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்.

கடந்த சில நாட்களுக்கு பாஜக தலைவர் அமித்ஷா அழைப்பின் பேரில் டெல்லி சென்றார் சங்கரமூர்த்தி. அப்போது உங்களுக்கு புதிய பொறுப்பு காத்திருக்கிறது... தயாராக இருங்கள் என கூறப்பட்டுள்ளது.

இருப்பினும் தாம் எந்த மாநிலத்துக்கு ஆளுநராக நியமிக்கப்படுகிறோம் என்பதை மேலிடம் தெரிவிக்கவில்லை என்றும் கூறியுள்ளார் சங்கரமூர்த்தி. இம்மாத இறுதியில் தமிழக ஆளுநராக சங்கரமூர்த்தி நியமிக்கப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Veteran BJP leader and Legislative Council Chairperson D H Shankaramurthy is likely to become the Governor of Tamil Nadu soon.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X