For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மகள் ஷர்மிஸ்தா படுதோல்வி! 6,102 ஓட்டுதான் கிடைச்சது!!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் கிரேட்டர் கைலாஷ் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தா படுமோசமான தோல்வியைத் தழுவினார். அவர் மொத்தமே 6,102 வாக்குகள்தான் வாங்கியுள்ளார்.

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபை தொகுதியில் 67 இடங்களைக் கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. பாரதிய ஜனதா கட்சியோ 3 இடங்களில்தான் வென்றுள்ளது.

Sharmistha Mukherjee trails from Greater Kailash constituency

காங்கிரஸ் கட்சி வரலாறு காணாத படுதோல்வியாக ஒரு இடத்தில் கூட வெல்லாமல் முட்டை வாங்கியுள்ளது. அக்கட்சியின் முதல்வர் வேட்பாளரான அஜய் மக்கான் உட்பட அனைவருமே தோற்றுப் போயுள்ளனர்.

இதில் காங்கிரஸ் வேட்பாளராக கிரேட்டர் கைலாஷ் தொகுதியில் போட்டியிட்ட ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் மகள் ஷர்மிஸ்தா படுதோல்வியைத் தழுவியுள்ளார். அவர் வாங்கிய மொத்த வாக்குகள் எண்ணிக்கையே 6,102தான்.

இத்தொகுதியில் ஆம் ஆத்மியின் சரவுவ் பரத்வாஜி 57, 589; பா.ஜ.க.வின் ராகேஷ் குமார் 43, 006 வாக்குகளைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மியை திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி ஆதரித்ததால் டெல்லி வாழ் மேற்கு வங்க மாநிலத்தவர் ஆம் ஆத்மிக்கே வாக்களித்துவிட்டார்களோ? அதனால்தான் பிரணாப் முகர்ஜி மகளும் தோல்வியை சந்திக்க நேர்ந்ததோ என்று ட்விட்டர்வாலாக்கள் பதிவிட்டு வருகின்றனர்.

English summary
Congress candidate Sharmistha Mukherjee is trailing as per the early trends. Sharmistha Mukherjee is contesting from Greater Kailash where Rakesh Kumar Gullaya is BJP. Former AAP Minister Sourav Bhardwaj was leading from Greater Kailash where Congress’ had fielded President Pranab Mukherjee’s daughter Sharmistha Mukherjee.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X