கத்திரிக்கோலை பிடிக்கத் தெரியலை.. கிண்டலடித்ததால் வெறித்தனமாக குத்தினேன்.. டெல்லி கொலைகாரன்

By:

டெல்லி: டெல்லியில் பட்டப் பகலில் பலர் பார்க்க இளம் ஆசிரியையை கொடூரமாக குத்திக் கொன்ற நபர் பின்னர் அதை செல்போனில் படம் பிடித்து வாட்ஸ் ஆப்பில் அனுப்பிய தகவல் தற்போது தெரிய வந்துள்ளது. மேலும் கத்திரிக்கோலால் குத்தியபோது கருணா கிண்டல் செய்ததால் மேலும் கோபமடைந்து வெறித்தனமாக அவரைக் குத்திக் கொன்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

டெல்லியை நடுங்க வைத்துள்ளது இந்தப் படுகொலை. கருணா என்கிற 21 வயதான அந்த இளம் ஆசிரியை நேற்று காலை மிக மோசமான முறையில் குத்திக் கொல்லப்பட்டார். சுரேந்தர் சிங் என்ற நபர்தான் இந்தக் கொலையைச் செய்தவர். 34 வயதாகும் இவர் திருமணமாகி விவாகரத்து பெற்றவர் ஆவார்.

கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார். அங்குதான் கருணா முன்பு கம்ப்யூட்டர் படித்தார். அப்போது ஒரு தலையாக கருணாவைக் காதலித்துள்ளார். ஆனால் கருணா இதை ஏற்கவில்லை. இதனால் பிரச்சினை செய்தார். போலீ்ஸுக்கு புகார் போனது. போலீஸார் கூப்பிட்டு சுரேந்தரை எச்சரித்தனர். இதனால் சுரேந்தர் அமைதியானார்.

டெல்லி கருணா

இந்த நிலையில் நேற்று கருணா தனது ஒன்று விட்ட சகோதரி நேஹாவுடன் தான் பணியாற்றி பள்ளிக்குப் போனார். அப்போது காத்திருந்த சுரேந்தர் சிங் திடீரென ஓடி வந்து கருணாவைத் திட்டினார். பலமாக அடித்து அவரைக் கீழே தள்ளினார். பின்னர் கையில் வைத்திருந்த இரண்டு கத்திரிக் கோல்களை எடுத்து கருணாவை வெறி கொண்டு குத்தினார். சரமாரியாக அவர் குத்தியதில் பரிதாபமாக உயிரிழந்து போனார் கருணா.

2 நிமிடத்தில் 30 முறை

நிமிடத்தில் கிட்டத்தட்ட 30 முறை வெறித்தனமாக குத்தியதால் கருணா சம்பவ இடத்திலேயே இறந்து போனார். கருணா இறந்த பிறகும் கூட வெறித்தனமாக குத்தியுள்ளார் சுரேந்தர். அத்தோடு தனது செல்போனை எடுத்து கருணாவின் இறந்த உடலைப் புகைப்படம் எடுத்து வாட்ஸ் ஆப்பிலும் யாருக்கோ அனுப்பினார். அதன் பிறகே அவர் ஓய்ந்தார்.

என்னை விட்டு விட்டு இன்னொருவருடன்

இந்தக் கொலை தொடர்பாக சுரேந்தர் சிங் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் நானும் கருணாவும் 2012ம் ஆண்டு முதலே பழகி வந்தோம். இருவரும் சேர்ந்து எடுத்தப் புகைப்படங்களும் உள்ளன. இடையில் அவர் பிரிந்து விட்டார். நான் மீண்டும் சேர முயன்று வந்தேன். ஆனால் என்னை அவர் புறக்கணித்து வந்தார்.

ஆபாசப் பேச்சு

இந்த நிலையில்தான் மோஹித் என்பவருடன் கருணாவுக்குப் பழக்கம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்தேன். அவர்கள் இருவரும் சேர்ந்திருக்கும் புகைப்படமும் எனக்குக் கிடைத்தது. அவர்களது பேஸ்புக் உரையாடல்களை நான் திருட்டுத்தனமாக கண்காணித்தேன். அவர்கள் மிகவும் அந்தரங்கமாக பேசியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். இதனால்தான் கொலை செய்ய முயற்சித்தேன்.

 

 

கிண்டல் செய்ததால் வெறியானேன்

நான் அவர் மீது முதலில் கத்திரி்கோலால் தாக்கியபோதுசரியாக வெட்ட முடியவில்லை. தோள்பட்டையில் குத்து விழுந்தது. அந்த சமயத்திலும் கூட அவர் என்னைப் பார்த்து கத்திரிக்கோலைக் கூட ஒழுங்காப் பிடிக்கத் தெரியலை என்று கூறியதால் கொதிப்பின் உச்சத்திற்கேப் போய் விட்டேன். அதன் பிறகுதான் நான் வெறித்தனமாக அவரை விடாமல் குத்திக் கொன்றேன் என்று கூறியுள்ளார் சுரேந்தர்.

English summary
The brutal killing of Karuna in Delhi has created shock waves in the capital and the killer has said that she teased him in the last minute too, so he killed her brutally.
Please Wait while comments are loading...

Videos