For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'அரெஸ்ட்' அச்சத்தில் சோமா செளத்ரி ராஜினாமா: மகளிர் ஆணைய உறுப்பினர் கருத்து!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: டெஹல்கா தருண் தேஜ்பால் மீதான பாலியல் பலாத்கார புகாரில் தாமும் கைது செய்யப்பட்டுவிடுவோம் என்ற அச்சத்திலேயே நிர்வாக ஆசியர் சோமா செளத்ரி ராஜினாமா செய்திருப்பதாக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் நிர்மலா சாவந்த் கருத்து தெரிவித்துள்ளார்.

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள டெஹல்கா பத்திரிகையின் முன்னாள் தலைமை ஆசிரியர் தருண் தேஜ்பாலை காப்பாற்ற முயல்வதாக அதன் நிர்வாக ஆசிரியர் சோமா செளத்ரி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Shoma Chaudhury fearing arrest, says NCW member

இதையடுத்து இன்று அவர் தனது நிர்வாக ஆசிரியர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில் சோமா சவுத்ரி கைதாகி விடுவோமோ என்ற பயத்தில் தான் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரான நிர்மலா சாவந்த் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், சோமா செளத்ரி போலீஸ் விசாரணைக்கு ஒத்துப் போகவில்லை என்பதையே அவரது ராஜினாமா காட்டுகிறது. அவர் சாட்சிகளை மறைக்க முயல்கிறார்.

இந்திய குற்றவியல் நடைமுறை சட்டப்படி இதுவும் தண்டனைக்குரிய குற்றமாகும். சோமா செளத்ரியை பற்றி இடைவிடாத விமர்சனம் வெளியானதை அடுத்தே அவர் இன்று காலை ராஜினாமா செய்துள்ளார் என்றார்.

English summary
National Commission for Women (NCW) member Nirmala Sawant Prabhavalkar on Thursday said Tehelka managing editor Shoma Chaudhury may have resigned because she fears she will be arrested.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X