For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அஸ்ஸாம் மாநிலத்தின் முதல் பாஜக முதல்வரான சோனோவால்

By Siva
Google Oneindia Tamil News

டிஸ்பூர்: அஸ்ஸாம் மாநிலத்தின் முதல் பாஜக முதல்வராக சர்பானந்த சோனோவால் இன்று மாலை பொறுப்பேற்றுக் கொண்டார்.

அஸ்ஸாம் சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து பாஜக தலைவர் சர்பானந்த சோனோவால் அஸ்ஸாம் முதல்வராக இன்று மாலை பதவியேற்றுக் கொண்டார். இதன் மூலம் அஸ்ஸாம் மாநிலத்தின் முதல் பாஜக முதல்வர் என்ற பெருமையை பெற்றுள்ளார் சோனோவால்.

Sonowal becomes BJP's first CM in Assam

பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, பஞ்சாப் முதல்வர் பர்காஷ் சிங் பாதல், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயடு, ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, சத்தீஸ்கர் முதல்வர் ராமன் சிங், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மத்திய அமைச்சர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சோனோவாலுக்கு அஸ்ஸாம் மாநில ஆளுநர் பி.பி. ஆச்சார்யா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். விழாவில் பேசிய மோடி கூறுகையில்,

மாற்றத்தை விரும்பி சோனோவால்ஜிக்கு வாய்ப்பளித்த அஸ்ஸாம் மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பழங்குடியினத்தை சேர்ந்த சோனோவால் தற்போது அஸ்ஸாம் மக்களின் தலைவராக ஆகியுள்ளார்.

அவர் அஸ்ஸாம் மாநிலத்தின் மேம்பாட்டிற்காக பாடுபடுவார் என்றார்.

English summary
Sarbananda Sonowal has taken oath as CM of Assam On tuesday evening. He is the first BJP leader who has come to that post.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X