For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராணுவத்தின் 'ஷைனிங் ஸ்டார்' தென் பிராந்திய கமாண்ட்

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய ராணுவம் 67வது ராணுவ தினத்தை நாளை கொண்டாட தயாராகிக் கொண்டிருக்கிறது. எல்லையில் பதற்றம், நாட்டுக்குள் பிரச்சனை என்று உள்ளது ராணுவத்தின் பணியை தினமும் மாற்றுகிறது.

இந்நிலையில் ராணுவத்தின் தென் பிராந்திய கமாண்டையும், அதன் சாதனைகளையும் பார்ப்போம். தென் பிராந்திய கமாண்டின் தலைமையகம் புனேவில் உள்ளது.

ராணுவ தினம்

ராணுவ தினம்

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 15ம் தேதி ராணுவ தினம் கொண்டாடப்படுகிறது. 1948ம் ஆண்டு ஜனவரி மாதம் 15ம் தேதி லெப்டினன்ட் ஜெனரல் கரியப்பா இங்கிலாந்தின் கடைசி கமாண்ட்ரிடம் இருந்து ராணுவத்தின் அதிகாரத்தை பெற்றுக் கொண்டார். இந்த தினத்தன்று இந்தியா முழுவதும் கொண்டாட்டங்கள் நடைபெறும். இந்த ஆண்டு ராணுவ தினத்தன்று தென் பிராந்திய கமாண்ட் மும்பையில் உள்ள கேட்வே ஆப் இந்தியாவில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் வீரதீர செயல்கள் செய்த வீரர்கள் 30 பேர் கௌரவிக்கப்பட உள்ளனர். நம் நாட்டின் மேற்கு மற்றும் தெற்கு எல்லைகளை பாதுகாக்கும் பொறுப்பு தென் பிராந்திய கமாண்டுடையது. சுதந்திரத்திற்கு பிறகு அனைத்து முக்கிய ஆபரேஷன்களிலும் தென் பிராந்திய கமாண்ட் கலந்து கொண்டுள்ளது. மேலும் இயற்கை பேரிடர் காலங்களில் மக்களுக்கு உதவி செய்துள்ளது.

போர்

போர்

1961ம் ஆண்டு போர்ச்சுக்கீஸியர்களிடம் இருந்து கோவாவை பெறுவதில் தென் பிராந்திய கமாண்ட் முக்கிய பங்காற்றியுள்ளது. மேலும் 1965ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த போரிலும் இந்த கமாண்ட் முக்கிய பங்காற்றியுள்ளது. 1971ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போரில் தென் பிராந்திய கமாண்டின் செயல் பாராட்டுக்குரியது. ஜெய்சல்மார் செக்டரில் நடந்த லாங்கிவாலா சண்டையிலும் தென் பிராந்திய கமாண்ட் அரும்பணியாற்றியுள்ளது.

பார்மர் செக்டாரில் பாகிஸ்தான் ஆக்கிரமித்திருந்த 9000 சதுர கிலோமீட்டர் இடத்தை மீட்டதிலும் தென் பிராந்திய கமாண்ட் முக்கிய பங்காற்றியுள்ளது.

ஹீரோ

ஹீரோ

நாட்டின் தென் பகுதியில் இயற்கை சீற்றம் ஏற்பட்டாலோ அல்லது தாக்குதல்கள் நடந்தாலோ மக்களுக்கு தென் பிராந்திய கமாண்ட் உதவி செய்து வருகிறது. மக்களை காப்பாற்ற தென் பிராந்திய கமாண்ட் வீரர்கள் தங்கள் உயிரையும் பெரிதாக நினைக்காமல் செயல்பட்டு வருகின்றனர். 2014ம் ஆண்டில் ஆந்திராவை ஹூட்ஹூட் புயல் தாக்கியபோதும், செப்டம்பர் மாதம் வதோதராவில் வெள்ளம் ஏற்பட்டபோதும் மீட்பு பணியில் ஈடுபட தென் பிராந்திய கமாண்ட் ஆட்கள் தான் அழைக்கப்பட்டனர்.

கடந்த ஆண்டு காஷ்மீரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோது ஆபரேஷன் மேக்ரஹாத்துக்கு தென் பிராந்திய கமாண்ட் ஆட்களை அனுப்பி வைத்ததுடன், பொருட்களும் கொடுத்தது.

பயிற்சி

பயிற்சி

தென் பிராந்திய கமாண்டில் என்.டி.ஏ., வில்வித்தை பயிற்சி பள்ளி, ஓ.டி.ஏ., ராணுவ பொறியியல் கல்லூரி உள்ளிட்ட சிறந்த பயிற்சி மையங்கள் உள்ளன. தென் பிராந்திய கமாண்டில் மொத்தம் 23 முக்கிய பயிற்சி நிறுவனங்கள் உள்ளன.

பல்வேறு ராணுவ அணிகள் இன்சியானில் 2014ல் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கங்கள் வென்று நாட்டுக்கு பெருமைத் தேடிக் கொடுத்தன.

வீரர்கள்

வீரர்கள்

ராணுவ வீரர்களின் தேவையை பூர்த்தி செய்ய கமாண்ட் பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளது. ராணுவத்தில் பணிபுரிபவர்கள், ஓய்வு பெற்றவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தாரின் நலனுக்காக நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

English summary
The Indian Army is gearing up to celebrate the 67th Army Day on January 15, 2015. With growing pressures across the borders and increasing low-intensity conflicts within the country, the role of Indian Army is changing by the day.On the occasion of Army Day, here’s a close look at the Southern Command and some of its significant achievements. The Command is headquartered in Pune. (The matter is being sourced from the Ministry of Defence, the Indian Army and the Press Information Bureau).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X