For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மீனவர் படுகொலையால் கொலைகார இலங்கைக்கு கவலையாம்.. சொல்வது இந்தியா- வெட்கக் கேடு!

தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து இலங்கை அரசு கவலை தெரிவித்துள்ளது என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

டெல்லி: தமிழக மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து இலங்கை அரசு கவலை தெரிவித்துள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கச்சதீவுக்கும், தனுஷ்கோடிக்கும் இடையே உள்ள கடல்பகுதியில் 6 மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது வாட்டர் ஸ்கூட்டரில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் அவர்களை சரமாரியாக சுட்டனர். இதில் பிரிட்ஜோ என்ற மீனவர் கழுத்தில் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். மேலும் சரோன் என்பவர் கையில் காயம் ஏற்பட்டது.

 Srilankan Govt has expressed its concern about Indian Fisherman shot dead

இச்சம்பவம் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து இலங்கை அரசு கவலை தெரிவித்துள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில், தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து இலங்கை அரசு மிகவும் கவலை தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கான இலங்கை தூதரும் மீனவர் பிரச்னை குறித்து இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை நடத்தப்படும் என்று இலங்கை கடற்படை உறுதி அளித்துள்ளது என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக மீனவர் படுகொலை நேரத்திலும் கொலைகார பங்காளி இலங்கைக்கு வக்காலத்துக்கு வாங்கும் இந்தியாவை என்ன சொல்வது? வெட்கக் கேடு!!

English summary
The Srilankan Govt has expressed its concern about Indian Fisherman shot dead, the fishermen issues was conveyed to Srilanka Prime minister by Srilanka's High commissioner to India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X