For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாங்க, வாங்க கேரளாவுக்கு வாங்க: வரவேற்க உள்ள ஷாருக்கான், ஸ்டெபி கிராப்

By Siva
Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளா சுற்றுலாத்துறை அம்பாசிடர்களாக பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் முன்னாள் டென்னிஸ் வீராங்கனை ஸ்டெபி கிராப் ஆகியோரை நியமிக்க உள்ளனர்.

கேரளா அரசு தனது சுற்றுலாத்துறையை உலகம் முழுவதும் பிரபலமாக்க திட்டமிட்டுள்ளது. இதையடுத்து பாலிவுட் நடிகர் ஷாருக்கான், ஜெர்மனியைச் சேர்ந்த முன்னாள் டென்னிஸ் வீராங்கனை ஸ்டெபி கிராப் ஆகியோரை கேரளா சுற்றுலாத்துறை அம்பாசிடர்களாக நியமிக்க முடிவு செய்துள்ளனர்.

ஸ்டெபி கிராப் மூலம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இடையே ஆயுர்வேதத்தை பிரபலமாக்க கேரள அரசு திட்டமிட்டுள்ளது.

ஸ்டெபி

ஸ்டெபி

ஆரோக்கியமாகவும், இளமையாகவும் இருக்க ஆயுர்வேதம் சிறந்த வழி என்று ஸ்டெபி கிராப் விளம்பரம் செய்ய உள்ளார். அவர் டென்னிஸில் இருந்து ஓய்வு பெற்றிருந்தாலும் உலகம் முழுவதும் அவர் இன்னும் பிரபலமாகவே உள்ளார்.

மாஸ்

மாஸ்

ஸ்டெபி என்ன தான் ஒரு காலத்தில் விளையாடியவராக இருந்தாலும் டென்னிஸ் ரசிகர்கள் நினைவில் அவர் இன்னும் உள்ளார். அவர் பிரபலமாக உள்ளதை பயன்படுத்தி ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் ஆயுர்வேதத்தை விளம்பரப்படுத்த நினைக்கிறது கேரள அரசு.

ஷாருக்கான்

ஷாருக்கான்

ஷாருக்கான் பாலிவுட் படங்களில் நடித்தாலும் அவர் இந்தியா முழுவதும் பிரபலம். ஏன் வெளிநாடுகளில் கூட அவர் பிரபலமாக உள்ளார். இதனால் அவரை வைத்து உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களிடையே கேரளா சுற்றுலாத்துறையை விளம்பரப்படுத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது.

சுற்றுலாப் பயணிகள்

சுற்றுலாப் பயணிகள்

ஆண்டுதோறும் கேரளாவுக்கு 10 லட்சத்திற்கும் குறைவான வெளிநாட்டவர்கள் வருகிறார்கள். அதேசமயம் சுமார் ஒரு கோடி இந்தியர்கள் கேரளாவை சுற்றிப் பார்க்க வருகிறார்கள்.

மது

மது

கேரளாவில் மதுவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகளை எளிதில் கவரலாம் என்று மாநில அரசு நினைக்கிறது. குஜராத் சுற்றுலாத் துறை அம்பாசிடராக நடிகர் அமிதாப் பச்சனும், மத்திய சுற்றுலாத் துறை அம்பாசிடராக நடிகர் ஆமீர் கானும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Kerala government has decided to nominate former tennis player Steffi Graf and Shah Rukh Khan as ambassadors for Kerala tourism.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X