For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டிவி சேனல் விவாதத்தில் திடீரென கட் ஆன ஸ்டாலின் 'மொபைல்'

டிவி சேனலில் ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்கப்பட்டு வந்த நிலையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் செல்போன் இணைப்பு திடீரென கட் ஆகிவிட்டது.

Google Oneindia Tamil News

டெல்லி: அதிமுக எம்.எல்.ஏக்கள் விலைபேசப்பட்டது குறித்து டைம்ஸ் நவ் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் திமுக செயல்தலைவர் பங்கேற்றிருந்தார். ஆங்கிலத்தில் கேள்வி கேட்கப்பட்ட நிலையில் ஸ்டாலின் மொபைல் தொடர்பு திடீரென கட் ஆனது.

தமிழக எம்எல்ஏக்களை சசிகலா கும்பல் பணம் கொடுத்து விலைக்கு வாங்கியது மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. எடப்பாடி அரசு செய்த மிகப் பெரிய ஊழலாக இது கூறப்படுகிறது.

பணம் பெற்றுக்கொண்டு எடப்பாடிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களித்த எம்எல்ஏக்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த உண்மையை மூன் தொலைக்காட்சியும் டைம்ஸ் நவ் தொலைக்காட்சியும் வெளிக்கொண்டுவந்துள்ளது.

டைம்ஸ்நவ்வில் விவாதம்

டைம்ஸ்நவ்வில் விவாதம்

இந்நிலையில் இதுகுறித்த விவாத நிகழ்ச்சி டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் நடைபெற்றது. இதில் அதிமுக அம்மா அணி, பாஜக, ஓபிஎஸ் அணி மற்றும் அரசியல் விமர்சகர்கள் கலந்து கொண்டனர்.

பங்கேற்ற ஸ்டாலின்

பங்கேற்ற ஸ்டாலின்

இந்நிகழச்சியில் திமுக செயல் தலைவரும் தமிழக எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் கலந்து கொண்டார். அவரிடம் முதலில் தமிழில் கேள்வி கேட்கப்பட்டது.

அழகு தமிழில்

அழகு தமிழில்

அதற்கு அழகாக பதிலளித்த ஸ்டாலின் பண அதிகாரம் வெளிப்பட்டிருப்பதாக கூறினார். ஆட்சியை உடனடியாக கலைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

ஆங்கிலத்தில்...

ஆங்கிலத்தில்...

இதைத்தொடர்ந்து பார்க்கும் அனைத்து மக்களுக்கும் புரிய வேண்டும் என்பதற்காக தங்களிடம் ஆங்கிலத்தில் கேள்வி கேட்கிறேன் அதற்கு பதில் அளியுங்கள் என்றார் தொகுப்பாளர். அப்போது திடீரென ஸ்டாலின் மொபைல் இணைப்பு கிடைக்காமல் போனது.

English summary
Staling was talking in a English news channel in tamill. When he was asked to answer in English he disconnected the call.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X