இந்தியாவில்தான் அதிகளவு சோம்பேறிகளாம்.. அமெரிக்க ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: அதிக சோம்பேறி மனிதர்கள் இருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 39வது இடத்தைப் பிடித்துள்ளது என்ற அதிர்ச்சியான ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளது அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம்.

உலகின் உள்ள 46 நாடுகளில், சோம்பேறிகள் அதிகம் எந்த நாடுகளில் இருக்கிறார்கள் என்ற ஆய்வை ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் நடத்தியது. இதில் இந்தியா 39வது இடத்தைப் பிடித்துள்ளது.

Stanford university study says Indians among world's laziest, take just 4,297 steps a day

இதற்காக, ஸ்மார்ட்போன் செயலி வழியாக 46 நாடுகளில் உள்ளவர்களின் நடைபயணத்தை கணக்கிட்டுள்ளனர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள். அதன் மூலம் 46 நாடுகளில் சுமார் 7 லட்சம் பேரிடம் மெகா ஆய்வு நடத்தப்பட்டது. இதில் குறைவான சோம்பல் குணம் கொண்டவர்கள் சீனர்கள் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஹாங்காங்கைச் சேர்ந்தவர்கள் நாளொன்றுக்கு 6,880 அடிகள் நடக்கின்றனர். மிக மோசமான சோம்பேறிகளாக, நடக்கவே யோசிக்கும் மக்களாக இந்தோனேசிய நாட்டவர் இருக்கிறார்கள் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்தோனேசிய நாட்டு மக்கள், ஒவ்வொருவரும் சராசரியாக நாளொன்றுக்கு 3,513 அடிகள் நடக்கின்றனர். உலகம் முழுவதும் மக்கள் சராசரி 4,961 அடிகள் நடக்கிறார்கள். இதில் அமெரிக்கர்கள் சராசரியாக 4,774 அடிகள் நடக்கிறார்கள்.

இந்த ஆய்வு இந்தியர்கள் மத்தியிலும் நடத்தப்பட்டது. அதில் சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது ஆண்களை விட பெண்கள் குறைவான தூரமே நடக்கின்றனர் என்ற உண்மை வெளிவந்துள்ளது. ஆண்கள் 4,606 அடிகள் என்றால், பெண்கள் 3,684 அடிகள் மட்டுமே நடக்கிறாரகள். அதிலும் உடல் பருமன் கொண்ட பெண்கள்தான் அதிக தூரம் நடக்கின்றனர்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
USA Stanford university study says Indians among world's laziest, take just 4,297 steps a day.
Please Wait while comments are loading...