For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வெடிக்கிறது புது சர்ச்சை... சு.சுவாமிக்கு டெல்லி ஜஹவர்லால் நேரு பல்கலைக் கழக துணைவேந்தர் பதவியாம்..

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமிக்கு டெல்லி ஜஹவர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் (ஜே.என்.யூ) துணைவேந்தர் பதவி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக வெளியான தகவல் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இருப்பவர் எஸ்.கே. சோபோராய் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஓய்வு பெற உள்ளார். புதிய துணைவேந்தரை அறிவிப்பதற்கு முன்னர் விதிகளின்படி தேர்வுக் குழு ஒன்றை அமைக்க வேண்டும்.

Subramanian in race for JNU VC post

அந்தக் குழு விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரர்களில் யார் யாரையெல்லாம் நியமிக்கலாம் என முடிவு செய்து பரிந்துரைக்கும். அந்த பரிந்துரை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவர் ஒப்புதல் தெரிவித்த பின்னரே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

இதற்கு ஏதுவாக புதிய துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்களை கோரி கடந்த ஆகஸ்ட் மாதம் விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சுப்பிரமணியன் சுவாமியை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தொடர்பு கொண்டு, ஜே.என்.யூ. துணைவேந்தர் பதவியை ஏற்றுக் கொள்கிறீர்களா? எனக் கேட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு சுப்பிரமணியன் சுவாமியோ, சில நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் அப்பதவியை ஏற்க தயார் எனக் கூறினாராம்.

ஜே.என்.யூ. பல்கலைக் கழக துணைவேந்தரை தேர்வு செய்வதற்கான குழுவையே முடிவு செய்யாமல் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, சுப்பிரமணியன் சுவாமியை இது குறித்து தொடர்பு கொண்டு பேசியதாக வெளியாகிருக்கும் செய்தி பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.

ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக பேராசிரியர்கள், மாணவர்களில் பெரும்பாலானோர் மதச்சார்பற்றவர்களாக, இடதுசாரி சிந்தனையாளர்களாக அறியப்பட்டுள்ளனர். அண்மையில் நடைபெற்ற மாணவர் சங்கத் தேர்தலில் இடதுசாரி இயக்கங்களின் வேட்பாளர்களே வென்றிருந்தனர். ஒரே ஒரு பதவியைத்தான் பாரதிய ஜனதாவின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. கைப்பற்றியிருந்தது. இந்த நிலையில் ஜஹவர்லால் நேரு பல்கலைக் கழகத்துக்கு துணைவேந்தராகவே வலதுசாரி இந்துத்துவா தீவிரவாதம் பேசுகிற சுப்பிரமணியன் சுவாமி நியமிக்கப்பட்டால் நிச்சயம் அங்கு அமைதியற்ற நிலைதான் எப்போதும் இருக்கும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

English summary
HRD Ministry is believed to have offered the post of Jawaharlal Nehru University (JNU) vice chancellor to BJP leader Subramanian Swamy.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X