For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காந்தியை சுட்ட கோட்சேவுக்கு "இத்தாலி" துப்பாக்கி கிடைத்தது எப்படி? சு.சுவாமி கிளப்பும் புது பூதம்!!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: மகாத்மா காந்தியை சுட்டுப் படுகொலை செய்த கோட்சேவிடம் இத்தாலி நாட்டு துப்பாக்கியைக் கொடுத்தது யார்? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார் பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமி. இதனால் மகாத்மா காந்தி படுகொலை வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சுப்பிரமணியன் சுவாமி தமது ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ளதாவது:

இத்தாலி துப்பாக்கி

காந்தியை கோட்சே சுட்டு கொன்ற போது பயன்படுத்தியது இத்தாலி நாட்டு பெரட்டா பிஸ்டல் ஆகும். பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள் மட்டுமே அந்த ரக துப்பாக்கியை வைத்திருந்தனர்.

இன்னும் விசாரிக்கவில்லை

கோட்சேவுக்கு இந்த இத்தாலி துப்பாக்கியை கொடுத்தது யார் ? இது கோட்சே கைக்கு எப்படி போனது? இது குறித்து விசாரிக்கப்படாமலே இருக்கிறது.

அந்த ஒரு குண்டு

கோட்சே 3 குண்டுகளை பிரயோகித்துள்ளார் . ஆனால் 4 குண்டுகள் இருப்பதாக சில செய்தி நிறுவனங்கள் புகைப்படம் வெளியிட்டுள்ளன . விசாரணையில் 3 குண்டுகள் இருந்தது மட்டுமே கூறப்படுகிறது. 4 வது குண்டு எப்படி வந்தது ? காந்தியின் இதயபகுதியை துளைத்த குண்டு எது ? பிரேத பரிசோதனை அறிக்கை சொல்வது என்ன?

கோட்சே கைதும் விடுதலையும்

காந்தியை நாட்டு வெடிகுண்டு மூலம் கொலை செய்ய முயற்சித்ததாக 1948ஆம் ஆண்டு ஜனவரி 20-ந் தேதி கோட்சே கைது செய்யப்பட்டார். பின்னர் ஜனவரி 22-ந் தேதியே கோட்சே மவுண்ட்பேட்டனால் விடுதலை செய்யப்பட்டார். இதுகுறித்து மீண்டும் விசாரிக்க முறையிடுவேன்.

இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி தமது ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார்.

English summary
Senior BJP leader Subramanian Swamy has raides questions on Mahatma Gandhi's assassination case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X