For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கட்சிக்குள் தினகரனுக்கு அதிகரிக்கும் நெருக்கடி.. சிறையில் சசிகலாவிடம் 5 மணி நேரம் குமுறல்

சீனியர் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் சாதி ரீதியிலான எம்.எல்.ஏ.க்கள் தினகரனுக்கு நெருக்கடி தரத்துவங்கியுள்ளனர் என்று அதிமுக வட்டாரங்கள் நம்மிடம் தெரிவிக்கின்றன.

By Raj
Google Oneindia Tamil News

சென்னை: அமைச்சர் பதவி கேட்டு, சீனியர் எம்.எல்.ஏக்களும், ஜாதிவாரியாக பலமாக உள்ளவர்களும் அதிமுக துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள தினகரனுக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு ஆதரவு அளித்தால் அமைச்சர் பதவி தரப்படும் என்று வன்னியர், முக்குலத்தோர் ஜாதி சீனியர் எம்.எல்.ஏக்களுக்கு வாக்குறுதி அளித்து அவர்கள் ஓ.பி.எஸ் பக்கம் போகாமல் தடுத்துள்ளார் தினகரன்.

இப்போது எடப்பாடி பழனிச்சாமி அரசு நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில் வென்றுவிட்டதால், அமைச்சர் பதவி கேட்டு அவர்கள் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

நெருக்கடி

நெருக்கடி

சீனியர் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் சாதி ரீதியிலான எம்.எல்.ஏ.க்கள் தினகரனுக்கு நெருக்கடி தரத்துவங்கியுள்ளனர் என்று அதிமுக வட்டாரங்கள் நம்மிடம் தெரிவிக்கின்றன. பெரும்பான்மை நிரூபித்த பிறகு கேபினெட்டை மாற்றியமைப்போம் என உறுதி தந்திருந்ததை நினைவுபடுத்தி அமைச்சர் பதவியை கேட்டு நச்சரிக்க தொடங்கியுள்ளனராம்.

வாரிய தலைவர்

வாரிய தலைவர்

அமைச்சர் பதவி என்பது குறிப்பிட்ட அளவுக்கே நிரப்ப முடியும். இருக்கும் அமைச்சர்களை ஜெயலலிதா காலத்தை போல திடீரென மாற்ற முடியாது என்பதை உணர்ந்துள்ள பல விவரமான சீனியர்கள், அமைச்சர் பதவிக்கு இணையான வாரியத் தலைவர் பதவியை கேட்டு நச்சரிக்க தொடங்கியுள்ளனராம்.

சிறையில் குமுறல்

சிறையில் குமுறல்

இதை எப்படி சமாளிப்பது என்பது தினகரனுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது. பட்ஜெட் முடிந்ததும் நிச்சயம் வாய்ப்பு தருகிறோம். இது பற்றி சின்னம்மாவை சந்தித்தும் பேசுகிறேன் என சொல்லி சமாதானப்பத்தியுள்ளராம் தினகரன். நேற்று பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுடன், தினகரன் இதுகுறித்து வெகு நேரம் ஆலோசித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 5 மணி நேரம் இதுகுறித்து தினகரன், தனது சித்தி சசிகலாவிடம் ஆலோசனை கேட்டாராம்.

பெண் சீனியர்கள்

பெண் சீனியர்கள்

அமைச்சர் பதவி, வாரியத் தலைவர் பதவி பிரச்சினையால் கட்சிக்குள் கலகம் வந்துவிடக் கூடாது என்று ஸ்ட்ரிக்டாக சொல்லியுள்ளாராம், அதிமுகவின் சின்னம்மா. கோகுல இந்திரா, வளர்மதி போன்றோர் சிறையில் சசிகலாவை சந்தித்து, தங்களுக்கு வாரிய தலைவர் பதவியை அளிக்க வேண்டும் என்று கேட்க திட்டமிட்டுள்ளார்களாம்.

English summary
Sudhakaran given pressure by AIADMK senior MLA's and cast leaders, says sources.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X