For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு யார், என்ன படித்துள்ளார்?

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: மத்திய ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்யும் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

வரும் நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுகிறது. பட்ஜெட்டை மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு இன்று தாக்கல் செய்கிறார்.

இந்நிலையில் சுரேஷ் பிரபு பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

கடந்த நவம்பர் மாதம் 9ம் தேதி மத்திய அமைச்சர் ஆகும் முன்பு சுரேஷ் பிரபு சிவசேனா தலைவராக இருந்தார்.

Suresh Prabhu – Know your Rail Minister

வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் அவர் மின்துறை அமைச்சராக இருந்தார்.

வாஜ்பாய் ஆட்சியில் பிரபு தொழில்துறை, சுற்றுச்சூழல் மற்றும் வனம், உரம் மற்றும் ரசாயணம், மின்துறை, கனரக தொழில் மற்றும் பொதுத்துறை அமைச்சராக இருந்தார்.

1996ம் ஆண்டு முதல் 2009ம் ஆண்டு வரை அவர் ரஜபூர் லோக்சபா தொகுதியில் இருந்து 4 முறை தேர்வு செய்யப்பட்டார்.

2009ம் ஆண்டு பொது தேர்தலில் பிரபு தோல்வி அடைந்தார்.

மானவ் சதான் விகாஸ் சன்ஸ்தா என்னும் என்.ஜி.ஓ.வை நடத்தி வருகிறார்.

பத்திரிக்கையாளரான உமாவை திருமணம் செய்துள்ளார் பிரபு. அவர்களுக்கு அமயா பிரபு என்ற மகன் உள்ளார்.

அவர் மும்பை எம்.எல்.தஹனுகர் கல்லூரியில் பி.காம் பட்டமும், நியூ சட்டக்கல்லூரியில் பி.எல். பட்டமும் பெற்றார்.

பிரபு சி.ஏ. படித்துள்ளார்.

English summary
Know your railway minister Suresh Prabhu who is presenting railway budget today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X