For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீரில் புகுந்து தாக்கிய இந்தியா- விரைவில் தாக்குதல் படங்கள் ரிலீஸ்?

Google Oneindia Tamil News

டெல்லி: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகளின் தளங்களைக் குறி வைத்து இந்திய விமானப்படையினரும், ராணுவத்தினரும் நடத்திய அதிரடித் தாக்குதலை வீடியோவில் பதிவு செய்துள்ளதாம் ராணுவம். இந்த வீடியோ பதிவுகளை வெளியிடுவது குறித்து மத்திய அரசு முடிவு செய்யும் என்று ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவில் இந்திய விமானப்படை நடத்திய அதிரடி தாக்குதலால் பாகிஸ்தான் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது. இந்த நிலையில் இந்த தாக்குதலை முழுமையாக ராணுவம் படம்பிடித்துள்ளது தெரிய வந்துள்ளது.

இந்தியாவின் தாக்குதல் அனைத்தும் படமாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய வீரர்கள் பத்திரம்...

இந்திய வீரர்கள் பத்திரம்...

இந்தியத் தரப்பில் யாருக்கும் எந்தக் காயமும் இல்லை என்றும் தாக்குதலுக்குப் பின்னர் அனைவரும் பத்திரமாக பாசறைக்குத் திரும்பி விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கையில்...

மத்திய அரசின் கையில்...

இதற்கிடையே, படமாக்கப்பட்ட தாக்குதல் காட்சிகளை விரைவில் மத்திய அரசு வெளியிடும் என்று தெரிகிறது. ஆனால் எப்போது வெளியிடுவது, எந்தக் காட்சியை வெளியிடுவது என்பதை மத்திய அரசுதான் தீர்மானிக்கும் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.

நள்ளிரவு தாக்குதல்...

நள்ளிரவு தாக்குதல்...

எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி பாகிஸ்தான் ஆக்கிரமித்து வைத்துள்ள காஷ்மீருக்குள் கிட்டத்தட்ட 2 கிலோமீட்டர் தூரம் வரை ஊடுறுவி இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது. நள்ளிரவுக்கு மேல் இந்திய படையினர் உள்ளே போய் விட்டு தாக்குதலை முடித்துக் கொண்டு சூரிய உதயத்திற்கு முன்பே திரும்பி விட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹெலிகாப்டர்கள் மூலம்...

ஹெலிகாப்டர்கள் மூலம்...

பாரா கமாண்டோப் படையினர், ஹெலிகாப்டர்கள் சகிதம் இந்தியா தாக்குதல் நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The surgical strikes in Pakistan-Occupied Kashmir that were carried out by India last night were recorded on cameras; the government will decide whether and when to release the footage, including some obtained through drones, said top sources.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X