For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பன்றிக் காய்ச்சல்: இதுவரை 2011 பேர் பலி... சிகிச்சையில் 33,462 நோயாளிகள்!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: நாடு முழுவதும் பன்றிக்காய்ச்சலால் பலியானவர்களின் எண்ணிக்கை 2011 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 33,462 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

ஹெச்1என்1 என்ற வைரஸ் மூலம் உலகின் பல நாடுகளின் வழியாக பன்றிகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த நோய் இந்தியாவின் வட மாநிலங்களில் தற்போது வேகமாக பரவி வருகின்றது. குறிப்பாக, ராஜஸ்தான், டெல்லி, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பன்றிக்காய்ச்சல் மிக, மிக வேகமாக பரவியபடி உள்ளது.

Swine Flu claims 17 more lives, toll crosses 2000 mark

2011 பேர் பலி

நாடு முழுவதும் இந்நோயால் 33,462 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நேற்று வரை 2,011 பேர் பலியாகியுள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.

குஜராத் - ராஜஸ்தான்

நாட்டிலேயே மிக உயர்ந்த அளவாக குஜராத்தில் 424 பேரும், அதற்கு அடுத்தபடியாக ராஜஸ்தானில் 411 பேரும், மகாராஷ்டிராவில் 385 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 296 பேரும் பலியாகியுள்ளனர்.

நாடுமுழுவதும் பலி

கர்நாடகாவில் 82 பேரும் தெலுங்கானாவில் 75 பேரும், பஞ்சாப்பில் 53 பேரும், ஹரியானாவில் 50 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 38 பேரும், மேற்கு வங்காளத்தில் 24 பேரும் ஆந்திராவில் 22 பேரும் உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் 16 பேர்

மேலும் சட்டீஸ்கரில் 22 பேரும் ஹிமாச்சலப்பிரதேசத்தில் 20 பேரும் ஜம்மு-காஷ்மீரில் 16 பேரும், தமிழ்நாட்டில் 16 பேரும், டெல்லியில் 12, மற்றும் கேரளாவில் 13 பேர் என இந்நோய்க்கு நேற்று வரை 2,011 பேர் பலியாகியுள்ளனர்.

அதிகரிக்கும் பாதிப்பு

நாடுமுழுவதும் இதுவரை 33,462 பேர் பன்றிக் காய்ச்சல் பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை அறிவிப்பு

குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்கள் பன்றிக்காய்ச்சலால் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

தீயாய் பரவும் பன்றிக் காய்ச்சல்... பதற வேண்டாம்: முன்னெச்சரிக்கையாக என்ன செய்யலாம்?தீயாய் பரவும் பன்றிக் காய்ச்சல்... பதற வேண்டாம்: முன்னெச்சரிக்கையாக என்ன செய்யலாம்?

English summary
Swine flu deaths crossed the 2,000 figure with the contagious disease claiming 17 more lives while the number of affected people stood at 33,462. Data collated by the Union Health Ministry on Friday said that till yesterday, 2,011 people have perished to the H1N1 virus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X