For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவின் பாதுகாப்பு வல்லமையை குறைத்து மதிப்பிட்டால் தக்க பதிலடி...ராஜ்நாத்சிங் 'வார்னிங்'

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவின் பாதுகாப்பு வல்லமையை குறைத்து மதிப்பிட்டால் தக்க பதிலடி கொடுப்போம் என்று ராஜ்யசபாவில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் இருந்து ஊடுவிய பயங்கரவாதிகள் கொடூர தாக்குதலை நடத்தினர். இதில் போலீஸ் எஸ்.பி. உட்பட 12 பேர் பலியாகினர்.

Terror activity from across the border will defeat: Rajnath Singh

இச்சம்பவம் குறித்து ராஜ்யசபாவில் இன்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விளக்கம்லித்தார். அப்போது, பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ராவி ஆற்றின் வழியாக பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவியதாக அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஜி.எஸ்.பி. கருவிகள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்தியாவின் பாதுகாப்பு வல்லமையை யார் குறைத்து மதிப்பிட்டாலும் தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றார்.

ராஜ்நாத்சிங்கின் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் ராஜ்யசபா நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

English summary
Any terror activity from across the border will be defeated, says Home Minister Rajnath Singh while making statement in Rajya Sabha on Gurdaspur attack.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X