For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சி.பி.எஸ்.இ பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது? பிரகாஷ் ஜவடேகர் பதி்ல்

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வெளியிடுவதில் தாமதம் ஏற்படாது என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் பல்வேறு தேர்வு மையங்களில் 10.98 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் பிளஸ் 2 சிபிஎஸ்இ தேர்வை எழுதினர்.

The CBSE Class 12 Results 2017 to be declared very soon, says Prakash Javadekar

இந்நிலையில் கடினமான கேள்விகளுக்கு அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கருணை மதிப்பெண்கள் கடந்த ஏப்ரல் மாதம் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் எனப்படும் சிபிஎஸ்இ ரத்து செய்தது. இதனால் தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக தேர்வு முடிவு வெளியாவது தாமதமாகி வருகிறது.

இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், ''சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவு குறித்த நேரத்தில் வெளியாகும். இதில் தாமதம் ஏற்படாது. இதுகுறித்து சிபிஎஸ்இ விரைவில் அறிவிப்பு வெளியிடும். அனைவருக்கும் நீதி கிடைக்கும். எனவே மாணவர்கள் இதுகுறித்து கவலைப்படத் தேவையில்லை'' என்றார்

English summary
The Union Minister for Human Resource Development, Shri Prakash Javadekar says The CBSE Class 12 Results 2017 to be declared very soon
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X