For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதராசா ஆசிரியர் மவுலானா ரம்சான் கான் பாக். உளவாளியாக உருவெடுத்தது இப்படித்தான்!

இந்தியாவில் உளவு வேலை பார்த்த பாகிஸ்தான் தூதரக அதிகாரி அக்தரின் கூட்டாளியான மவுலானா ரம்சான் கான் ராஜஸ்தானில் மதராசாவில் ஆசிரியராக பணிபுரிந்தவர். தற்போது ரம்சான்கான் உட்பட 3 பேரிடம் போலீசார் விசாரணை நட

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: பாகிஸ்தான் தூதரகத்தில் வேலைபார்த்த ஐ.எஸ்.ஐ உளவாளி அக்தருக்கு இந்திய ராணுவம் தொடர்பான ரகசிய தகவல்களை சேகரித்து கொடுத்ததாக ராஜஸ்தானைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் மவுலானா ரசம்கான் மதராசாவில் குழந்தைகளுக்கு இஸ்லாம் குறித்து பாடம் எடுத்த ஆசிரியர்.

ராஜஸ்தானின் நாகரைச் சேர்ந்தவர் மவுலானா ரம்சான் கான். அங்குள்ள மதராசாவில் மாதம் ரூ2,000 ஊதியத்துக்கு ஆசிரியராக பணியில் சேர்ந்தார். ராஜஸ்தானில் பாகிஸ்தான் எல்லையில் வசித்து வந்ததால் அந்த பகுதி முழுவதும் ரம்சான் கானுக்கு துல்லியமாக தெரியும்.

டெல்யில் பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றி வந்த ஐ.எஸ்.ஐ. உளவாளி மெக்மூத் அக்தர், ரம்சான் கானை தொடர்ந்து கண்காணித்து வந்தார். ரம்சான் கானுக்கு ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளின் தொடர்பிருப்பதை அக்தர் அறிந்துகொண்டார்.

ரூ50,000

ரூ50,000

ஓராண்டுக்கு முன்னர் ரம்சான் கானை நேரில் சந்தித்த ரம்சான் கான், ராணுவ ரகசியங்களை தமக்குக் கொடுத்தால் ரூ50,000 தருவதாக கூறியுள்ளார். ரம்சான் கானைப் பொறுத்தவரையில் அவர் வசித்த பகுதியில் நேர்மையானவர் என பெயரெடுத்தவர். இதனால் அவர் மீது யாருக்கும் எந்த சந்தேகமும் வரவில்லை.

சிக்கிய கூட்டாளி

சிக்கிய கூட்டாளி

ரம்சான் கான் தனக்கு ஒரு கூட்டாளியை தேடிக் கொண்டிருந்தார். அப்போதுதான் தொழிலில் நஷ்டத்தை சந்தித்த சுபாஷ் ஜஹாங்கீர், ரம்சான் கானிடம் சிக்குகிறார். ராணுவ ரகசியங்களை எப்படியாவது பெற்றுத் தந்தால் உன்னுடைய அத்தனை பிரச்சனைகளும் தீரும் என ஆசைவார்த்த காட்ட ஜஹாங்கீரும் அதற்கு உடன்பட்டார்.

உளவாளி அக்தர்

உளவாளி அக்தர்

ரம்சான் கான், ஜஹாகிங்கீர் போல எத்தனையோ கருப்பு ஆடுகளை பாகிஸ்தான் இந்திய மண்ணில் களமிறக்கி விட்டு ராணுவ ரகசியங்களை திருட்டுத் தனமாக பெற்று வருகிறது. தற்போது பாகிஸ்தான் தூதரகத்தின் விசா பிரிவில் பணியாற்றிய அக்தர் சிக்க அவர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார்.

துருவி துருவி விசாரணை

துருவி துருவி விசாரணை

ரம்சான் கான்- ஜஹாகிங்கீரின் மற்றொரு கூட்டாளியும் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த மூவரிடமும் டெல்லி போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ராணுவ ரகசியங்களை எல்லைப் பாதுகாப்பு படையைச் சேர்ந்த யாரேனும் கொடுத்தார்களா? என்பது குறித்தும் ஒட்டுமொத்தமாக உளவு வேலைக்கு எவ்வளவு பணம் தரப்பட்டது என்பதும் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

English summary
Maulana Ramzan Khan was a teacher at a Mosque in Nagaur, Rajasthan. He lived close to the border and was very familiar with the topography. Mehmood Akthar, the staffer in the Pakistan mission at New Delhi kept a close watch on him. Around an year ago, Akthar paid Khan a visit and made him an offer. Rs 50,000 will be paid to you if you get me information on the defence, Akthar said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X