For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நிர்பயா அவமானம்? என்டிடிவிக்கு எதிராக டைம்ஸ் நவ் போர்: சமூகவலைத்தளத்தில் கொதிப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: பலாத்கார குற்றவாளியை பேட்டி கண்டதன் மூலம் நிர்பயா அவமதிக்கப்பட்டுவிட்டதாக டைம்ஸ்நவ் கூறியுள்ளது. என்டிடிவிக்கு எதிராக டைம்ஸ் நவ் தொடுத்துள்ள இந்த புதுவகையான போர் சமூக வலைத்தளங்களில் புதிய கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் மருத்துவமாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக 'இந்தியாவின் மகள்' என்ற பெயரில் ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்காக அந்த வழக்கின் குற்றவாளியை பேட்டி கண்டனர். இதனை வரும் 8ஆம் தேதி என்.டி.டிவியில் ஒளிபரப்ப உள்ளதாக தகவல் வெளியானது.

Times Now launches campaign against NDTV over Nirbhaya docu broadcast

இதனை டைம்ஸ் நவ் செய்தித் தொலைக்காட்சி சேனல் விவாதப் பொருளாக்கியது. இதனை விமர்சித்து, சமூக வலைதளத்தில் இணையவாசிகள் தங்கள் ஆதங்கத்தைப் பதிந்து வருகின்றனர்.

இந்தியாவின் மகள்

2012 கடந்த டிசம்பர் 16-ம் தேதி ஓடும் பேருந்தில் மருத்துவமாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது, நாடு முழுவதும் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தை பிரிட்டனைச் சேர்ந்த படத் தயாரிப்பாளரும் ‘பாப்டா' விருது பெற்றவருமான லெஸ்லி உட்வின் பிபிசியுடன் இணைந்து இந்தியாவின் மகள் ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளார். அந்தப் படம் வரும் 8-ம் தேதி ஒளிபரப்பாகவுள்ளது.

சர்ச்சை பேட்டி

இவ்வழக்கின் குற்றவாளி முகேஷ் அளித்துள்ள பேட்டியில், "ஒரு கை ஓசை எழுப்ப முடியாது. இரண்டு கைகளும் சேர்ந்து தட்டினால்தான் ஓசை வரும். நாகரிகமான இளம்பெண் இரவு 9 மணிக்கு வெளியில் சுற்றிக் கொண்டிருக்க மாட்டாள்" என்று குற்றவாளி கூறியுள்ளது மீண்டும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆங்காகேங்கே போராட்டங்களும் வெடித்துள்ளன.

ராஜ்யசபாவில் கொந்தளிப்பு

ராஜ்யசபாவிலும் எதிர்கட்சிகள் இந்த சம்பவத்தை கையிலெடுத்து புயலை கிளப்பின. உள்துறை அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரியதால் அமைச்சர் ராஜ்நாத்சிங் விளக்கம் அளித்துள்ளார்.

சிறை இயக்குநருக்கு உத்தரவு

ஒருவர் திஹார் சிறைக்குள்ளிருந்து அளித்த பேட்டி தொடர்பாக, சிறையினர் இயக்குநரிடம் அறிக்கை சமர்ப்பிக்க மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார்.

மீண்டும் மீண்டும் ஏன்?

'இந்தியாவின் மகள்' என்ற அந்த ஆவணப்படத்தில் பலாத்கார குற்றவாளி கூறிய கருத்துக்களை 'தி டெலகிராஃப்' வெளியிட்டதிலிருந்தே, பலாத்காரத்துக்குள்ளாகி இறந்த அந்த பெண்ணை மீண்டும் மீண்டும் வார்த்தைகளால் பலாத்காரம் செய்ய வேண்டாம் என்று பலத் தரப்பினர் தங்களது ஆழ்மனதின் கொந்தளிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தொலைக்காட்சிக்கு எதிராக

குற்றவாளியிடம் பேட்டிக் கண்டுள்ள தொலைக்காட்சிக்கு எதிராகவும் எதிர்மறை கருத்துக்கள் எழுகின்றன. இந்தச் சூழலில் 'இந்தியாவின் மகள்' என்ற ஆவணப்படத்தை வெளியிட மத்திய அரசும் தடை விடுத்துள்ளது.

நிர்பாயா இன்சல்ட்

இந்த சர்ச்சையின் தாக்கம் சமூக வலைதளங்களிலும் பரவியிருக்கிறது. டுவிட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் வெளிப்படும் கருத்தாக்கங்களால் #NirbhayaInsulted என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் இடம்பெற்றுள்ளது.

இதுவா ஊடக தர்மம்

பி.பி.சியும், இந்திய செய்திச்சேனல் ஒன்றும் நிர்பயா பலாத்கார குற்றவாளியை பேட்டி கண்டுள்ளன. இது ஊடக தர்மமா என்று டைம்ஸ் நவ் கேள்வி எழுப்பியுள்ளது. இதற்கு பலரும் கருத்திட்டுள்ளனர்.

தினம் தினம் பலாத்காரம்

நிர்பயா ஒருமுறை பலாத்காரத்துக்குள்ளாகி ஒரு முறை இறந்தார். ஆனால் இந்த நாடு அவரை தினம் தினம் பலாத்காரம் செய்கிறது. கொலை செய்கிறது என்று ரூபிந்தர் என்பவர் கருத்திட்டுள்ளார்.

இந்தியாவில் மட்டுமே அவை அனைத்தும் நடக்கும். குற்றவாளியை தூக்கி நிறுத்தும் ஊடகங்கள். நேரகாணல், லைம் லைட் கவரேஜ். அதீத கேவலம் என்று சிட்டிஸன் ஜர்னலிஸ்ட் கூறியுள்ளது.

மலிவான புகழ்

பலாத்கார குற்றவாளிக்கு ஊடகங்கள் இடம் கொடுக்கின்றன. பிரிட்டன் ஊடக நேர்காணலை இந்திய ஊடகங்கள் ஒளிபரப்பி புகழ் தேடுகின்றன வீ ஆர் ராஸ்கல்ஸ் என்பவர் குறிப்பிட்டுள்ளார்.

லெஸ்லி உட்வின் இதில் தானா புகழ் தேட வேண்டும். ஊடகச் சுதந்திரம் இதற்காகவா பயன்படுகிறது? என்று யோ யோ ஹனி சிங் கூறியுள்ளார்.

நிர்பயா அவமானம்

பலாத்காரக் குற்றவாளி என்ன சொல்லப்போகிறார்? நான் பெண்களை மதிக்கிறேன் என்று நிச்சயம் சொல்லமாட்டார். அவரிடம் நேர்காணல் நடத்தினால் இப்படிதான் நடக்கும் என்று சுனந்தா ரானா என்பவர் ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

குற்றவாளி அளித்த நேர்காணலினால் நிர்பயாவுக்கு அவமானம் இல்லை. அவர்கள் உயிரோடு இருப்பதே நிர்பயாவுக்கு அவமானம் தான் அரேபிக்கா என்பவர் கருத்திட்டுள்ளார்.

பத்திரிகையாளர்கள் இதுபோன்ற செயலில் ஈடுபட்டு, இறந்த பெண்ணை மீண்டும் மீண்டும் பலாத்காரம் செய்யக் கூடாது என்று டாக்டர் நீலு கோசுவாமி குறிப்பிட்டுள்ளார்.

English summary
India's Daughter, a documentary made by BBC, interviews Mukesh Singh, one of the men convicted of the brutal Delhi gang rape of a physiotherapy student in 2012. Times Now throws several accusatory remarks at NDTV, without naming them even once.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X