For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டெல்லியில் பிரதமர் மோடியுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு...நீட் விவகாரம் குறித்து ஆலோசனை?

பிரதமர் நரேந்திர மோடியை நாடாளுமன்ற வளாகத்தில் முதல்வர் பழனிச்சாமி சந்தித்து பேசினார்.

By Gajalakshmi
Google Oneindia Tamil News

டெல்லி : துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பதவியேற்பு விழாவில் பங்கேற்க சென்ற முதல்வர் பழனிச்சாமி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார்.

அதிமுகவில் தினகரன் நியமனம் செல்லாது என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டு அரசியலில் பரபரப்பை கிளப்பினார் முதல்வர் பழனிச்சாமி. முதல்வரின் இந்த அறிவிப்பால் தினகரன் அணி கடுப்பாகியுள்ளது, எங்களது பதில் மதுரை மேலூர் பொதுக்கூட்டத்தில் தெரியும் என்று பூடகமாக பேசி வருகின்றனர் தினகரன் அணியினர்.

TN CM Palanisamy met Prime minister Narendra modi

இந்நிலையில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு பதவியேற்பு விழாவில் பங்கேற்க முதல்வர் பழனிச்சாமி நேற்று டெல்லி சென்றார். இன்று காலையில் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற பழனிச்சாமி பின்னர் நாடாளுமனற் வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரையும் உடனிருந்தார்.

இச்சந்திப்பின் நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

English summary
Tamilnadu Cm Edappadi Palanisamy met Prime minister Narendra Modi at Parliament and discussed the issues related to tn especially NEET exemption.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X