For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. ஆட்சியில் பாயும் அவதூறு வழக்குகள்... 5 ஆண்டில் 213... திமுக மீது மட்டும் 85 "கேஸ்"!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் அரசியல் கட்சிகள், ஊடகங்களுக்கு எதிராக மொத்தம் 213 அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன. இதில் திமுக மீதுதான் அதிகபட்சமாக 85 வழக்குகள் போடப்பட்டுள்ளன.

தமிழக அரசு தம் மீது தொடர்ந்த அவதூறு வழக்குகளுக்கு தடை கோரி தேமுதிக தலைவர் விஜயகாந்த் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் அவதூறு வழக்குகளுக்கு இடைக்காலத் தடை விதித்ததுடன் எத்தனை அவதூறு வழக்குகள் போடப்பட்டுள்ளன என்ற விவரத்தைத் தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டிருந்தது.

TN govt filed 213 defamation cases in 5 years

இந்த உத்தரவின் அடிப்படையில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு ஒரு அறிக்கையைத் தாக்கல் செய்தது.

அதில்,

  • 2011-16ம் ஆண்டு காலத்தில் 5 ஆண்டுகளில் 213 வழக்குகள் மொத்தம் போடபப்ட்டுள்ளன.
  • இதில் ஊடகங்களுக்கு எதிராக 55 வழக்குகள்
  • திமுகவுக்கு எதிராக 85 வழக்குகள்
  • தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு எதிராக 28 அவதூறு வழக்குகள்
  • பாமகவுக்கு எதிராக 9 வழக்குகள்
  • காங்கிரஸுக்கு எதிராக 7 வழக்குகள்
  • பாஜகவின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிராக 3 அவதூறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
  • இவ்வாறு தமிழக அரசு தாக்கல் செய்திருந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
English summary
Tamilnadu govt has filed 213 defamation cases in 2011-16 period.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X