For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழக முழுநேர ஆளுநராக வித்யாசாகர் ராவ் விரைவில் நியமனம்: மத்திய அரசு முடிவு?

By Karthikeyan
Google Oneindia Tamil News

டெல்லி: தமிழகத்தின் முழுநேர ஆளுநராக வித்யாசாகர் ராவ் விரைவில் நியமிக்கக் கூடும் என உள்துறை அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழக ஆளுநர் ரோசய்யாவின் பதவிக் காலம் கடந்த ஆகஸ்ட் மாதம் 31-ந் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து தமிழக ஆளுநர் பொறுப்பை மகாராஷ்டிரா மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ் கூடுதலாக கவனிப்பார் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அறிவித்தார். அதன் பின்னர் வித்யாசாகர் ராவ், செப்டம்பர் 2 ஆம் தேதி தமிழக பொறுப்பு ஆளுநராக பதிவியேற்றார்.

TN to have independent governor soon: MHA sources

இதனிடையே தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடந்த மாதம் 22 ஆம் தேதி உடல்நலக் குறைவு ஏற்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். முதல்வர் உடல்நலம் தேறி வந்தாலும், நீண்ட நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனால், தமிழக அரசின் நிர்வாகப் பணிகளை முறையாக நிர்வகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் தமிழகத்திற்கு பொறுப்பு முதல்வர் அல்லது இடைக்கால முதல்வரை நியமிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து முதல்வர் வகித்துவந்த இலாக்காக்களை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கவனிப்பார் என தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் அறிவித்தார். அமைச்சரவை கூட்டங்களுக்கும் அவரே தலைமை வகிப்பார் என்றும் ஆளுநர் தெரிவித்தார்.

தமிழகத்தில் நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு விரைவில் முழுநேர ஆளுநரை நியமிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் தற்போது கூடுதல் ஆளுநர் பதவி வகித்து வரும் வித்யாசாகர் ராவ், இரண்டு மாநில நிர்வாகப் பணிகளை முன்னெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் விரைவில் தமிழகத்துக்கு புதிய ஆளுநரை நியமிப்பது குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே தமிழகத்தின் முழுநேர ஆளுநராக வித்யாசாகர் ராவ் விரைவில் நியமிக்கக் கூடும் எனவும், அவர் தற்போது வகித்து வரும் மகாராஷ்டிரா ஆளுநர் பொறுப்புக்கு கர்நாடகா மாநில மூத்த பாஜக தலைவர் டி.ஹெச். சங்கரமூர்த்தி நியமிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Tamil Nadu will have an independent governor soon. The ministry for home affairs is discussing this issue and will soon appoint a permanent governor for the state of Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X