For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரியின் குறுக்கே கர்நாடகா அணை கட்ட உச்சநீதிமன்றத்தில் தமிழகம் கடும் எதிர்ப்பு!

காவிரியின் குறுக்கே கர்நாடகா அணை கட்ட உச்சநீதிமன்றத்தில் தமிழகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: காவிரியின் குறுக்கே கர்நாடகா அணை கட்ட உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

காவிரி நதிநீர் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணையின் போது காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட ஒப்புதல் தெரிவிக்கும் வகையில் தமிழக அரசின் வாதம் இருந்தது.

TN not allow to build new dams across Cauvery, says Sekar Naphde

இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து காவிரியின் குறுக்கே அணை கட்ட அனுமதிக்கமாட்டோம் என முதல்வர் எடப்பாடி கூறியிருந்தார்.

இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் இன்று காவிரி வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின் போது தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்டே, காவிரியின் குறுக்கே கர்நாடகாவை அணை கட்ட அனுமதிக்க முடியாது. அப்படி அனுமதித்தால் அது பல்வேறு சிக்கல்களை உருவாக்கும் என வாதிட்டார்.

இன்றைய காவிரி வழக்கின் வாதங்களை பார்வையிட சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் உச்சநீதிமன்றத்துக்கு சென்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Tamilnadu Lawyer Sekar Naphde said that State will not allow to Karnataka build new dams across Cauvery in Supreme Court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X