For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பெங்களூரில் நிலம், வீடு வாங்க தமிழர்கள் ஆர்வம்.. 3 ஏரியாக்களுக்கு ஏக கிராக்கி!

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூரு: ஆயிரம்தான், கன்னடர்களோடு, அண்ணன், தம்பி சண்டை இருந்தாலும், கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரு, தமிழர்களை பொருத்தளவில் ஒரு ஹாட் ஸ்பாட்டாகத்தான் மாறியுள்ளது.

பெங்களூரு நகரில் நிலம் வாங்க வேண்டும், வீடு கட்ட வேண்டும் என்பது, இங்கு வசிக்கும், மிடில் மற்றும் அப்பர்-மிடில் கிளாஸ் வர்க்கத்தின் கனவாக உள்ளது. அது ஏன் சென்னையிலோ தமிழகத்தின் வேறு பெருநகரங்களிலோ நிலம் வாங்க கூடாதா...பெங்களூரில்தான் வாங்க வேண்டுமா..இத்தனைக்கும், கன்னடர்களுக்கும், நமக்கும்தான் எப்போதும் சண்டை மூட்டிவிடப்பட்டுக் கொண்டுள்ளதே...என்று கேட்பவரா நீங்கள். அப்படியானால் இதை கண்டிப்பாக படிக்க வேண்டும்.

Top 3 localities in Bangalore where Tamilians are Buying Properties

சற்றென்று மாறுது வானிலை..

பெங்களூருவுக்கு மட்டும் அதென்ன சிறப்பு என்று கேட்டால், அதில் முந்தி நிற்பது, நகரின் தட்பவெட்ப நிலைதான். சென்னை மாதிரி, ஹாட்டுமில்லை, ஊட்டி மாதிரி, உறைய வைக்கும் குளிரும் இல்லை.

ஓசூர் ரோட்டில் 20 லட்சத்தில் வீடுகள்

எப்போதும், இதமான சில்னஸ்.. இதுதான் பெங்களூரு. இதற்காகத்தான் இத்தனை டிமாண்ட். கோடை காலமான ஒரு மூன்று மாதங்கள் தவிர்த்து எப்போதுமே, இந்த சிலுசிலு தன்மை அப்படியே இருக்கும். கோடையிலும் கூட காலைவேலைகளில், ஈரப்பத காற்று உடலை தீண்டி செல்வதை உணர்ந்தவர்கள், எப்படித்தான் நகரை விட்டு போக சம்மதிப்பர்.

தாய் வீட்டு நினைப்பு

பெங்களூரு என்பது, கர்நாடக தலைநகர் என்றால், பெரும்பாலான கன்னடர்களே நம்புவதில்லை. அந்த அளவுக்கு, காஸ்மோ பாலிட்டன் சிட்டியாக உருவெடுத்துள்ளது பெங்களூரு. இங்கு, தமிழ், தெலுங்கு மொழி பேசும் மக்கள், கன்னடர்களுக்கு ஈடாக உள்ளனர்.

28 லட்சத்தில் அபார்மெண்டுகள்

ஹிந்தி பேசும் மக்கள் விறுவிறுவென அதிகரித்துள்ளனர். மலையாளிகளும், வழக்கம்போல டாமினென்ட் செய்ய ஆரம்பித்துள்ளனர். எனவே இது ஒரு பாரத விலாஸ் போல காட்சியளிக்கிறது. எனவே தமிழர்களுக்கு தாய் வீட்டில் இருக்கும் ஃபீலிங்தான்.

ஐடி தொழில்

பல மொழி பேசுவோரையும், பெங்களூருக்கு கொண்டு வந்து குடியமர்த்தியதில் ஐடி துறைக்கு முக்கிய பங்கு உள்ளது. ஐடி துறை வளர்ச்சியால், இங்குள்ள லைஃப் ஸ்டைலும், மிகவும் முன்னேறிய நாகரீகமாக உள்ளது.

ஐடிபிஎல் அருகே 18 லட்சத்தில் பிளாட்டுகள்

பெண்கள் அரை டவுசருடன், மால்களில் சுற்றினாலும், அவர்களை பார்த்து கேலி செய்வதோ, ஈஸ் டீசிங் செய்வதோ பெங்களூருவில் மிக அரிது. சிகரெட் பிடித்தாலும், ஆச்சரியப்படுவாரில்லை. இதனால் ஐடி துறையினரின் சொர்க்கபுரியாக பெங்களூரு உள்ளது. நிலம், ஃபிளாட் வாங்குவோரில் பெரும்பாலானோரும், ஐடி ஊழியர்கள்தானாம்.

நிலம் வாங்க ஏற்ற இடம்

நிலம் வாங்க காரணமெல்லாம், ஓகே..தமிழர்கள் அப்படி எங்குதான் அதிக அளவில் நிலம் வாங்குகிறார்கள். அந்த ஏரியாவின் முக்கியத்துவம் என்ன என்று தெரியுமா..இதுகுறித்து click.in இணையதளம் நடத்திய ஆய்வில், தமிழர்கள் அதிக அளவில் நிலம், வீடு வாங்குவதில் முதலிடம் ஒசூர் ரோடு பகுதிகள்தான் என்பது தெரியவந்துள்ளது.

21 லட்சத்தில் 3 பெட்ரூம் வீடுகள்

லால்பாக் முதலே ஒசூர் ரோடு துவங்கினாலும், பொம்மனஹள்ளி முதல்தான், ஒசூர் ரோடு ஏரியா உண்மையிலேயே ஸ்டார்ட் ஆகிறது. இங்கு 2 படுக்கைவசதி கொண்ட ஃபிளாட்டுகள் ரூ.20 லட்சம் முதலே கிடைக்க தொடங்குகின்றன.

Top 3 localities in Bangalore where Tamilians are Buying Properties

அடுத்த இடம்

தமிழர்கள் அதிகம் நிலம் அல்லது வீடு வாங்கும், மற்றொரு இடம் ஐடிபிஎல் ரோடு பகுதியாகும். எச்.ஏ.எல்லில் இருந்து ஒயிட்பீல்டு பகுதிக்கு நடுவே இந்த சாலை பகுதி உள்ளது.

சர்ஜாபூர் சாலையில் அபார்ட்மெண்டுகள்

ஒசூர் ரோட்டிலுள்ள எலக்ட்ரானிக் சிட்டியை போலவே ஒயிட்பீல்டு பகுதியும், கம்ப்யூட்டர் நிறுவனங்களால் அலங்கரிக்கப்பட்ட ஏரியாவாகும். எனவே இங்கும் தமிழர்கள் அதிகம் நிலம், வீடு வாங்குகின்றனர். இங்கு இரு படுக்கை வசதி கொண்ட வீடுகள் ரூ.18.50 லட்சத்திலிருந்து கிடைக்கின்றன.

முக்கிய மூன்றாம் இடம்

சர்ஜாப்பூர் ரோடு பகுதியிலும், அதிக நிலம், வீடுகள் தமிழர்களால் வாங்கப்படுகின்றன. 27.72 லட்சம் ரூபாய் விலையில் இங்கு 2 படுக்கையறை கொண்ட வீடுகள் கிடைக்கின்றன.

சர்ஜாபூர் சாலை பிளாட்டுகள்

இந்த பகுதி, எலக்ட்ரானிக்சிட்டி மற்றும் ஒயிட்பீல்டு ஆகியவற்றுக்கு நடுவே உள்ளது. எனவே, எந்த பக்கம் வேலை பார்த்தாலும், இந்த பகுதியில் வீடு வாங்க ஐடி தமிழர்கள் ஆசைப்படுகிறார்கள்.

English summary
Bangalore is best place to live because of its weather, we can see many Tamil, Telugu, Malayalam & Hindi speaking people in the city. And here is the top 3 localities in Bangalore where Tamilians are Buying Properties.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X