For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2015 செல்போன் டிரெண்ட்.. சாம்சங்கிற்கு இறங்குமுகம், மைக்ரோமேக்ஸ், லெனோவா கலக்கல்

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: இதோ 2015ம் ஆண்டு முடியப்போகிறது. இந்த ஆண்டில் செல்போன் பிரியர்கள், அதிகப்படியாக தேடிய டாப் செல்போன்கள் எவை என்பது குறித்த பட்டியல் கூகுளில் வெளியாகியுள்ளது.

செல்போன்கள் பிரியர்களின் மன ஓட்டத்தை புரிந்துகொள்ள கூகுள் டிரெண்ட் உதவுகிறது. இதில் ஆப்பிளையும் பின்னுக்கு தள்ளி, மைக்ரோமேக்ஸ் முன்னணிக்கு வந்துள்ளது ஆச்சரியம் அளிக்கிறது.

அதேநேரம், புதிய நிறுவனங்கள் வளர்ச்சி செல்போன் துறையில் நம்பிக்கையை ஏற்படுத்துவதாகவும் உள்ளது. 2015ம் ஆண்டில் டாப்-5 இடங்களை பிடித்த செல்போன்கள் பற்றிய ஒரு பார்வை இதோ:

முதலிடம்

முதலிடம்

கூகுள் கணக்குப்படி, மைக்ரோமேக்சின் யுரேகா செல்போன் இவ்வாண்டில் அதிகமாக தேடப்பட்டுள்ளது. 4ஜி வசதி கொண்ட இந்த செல்போனில், ஸ்னாப்டிராகன் 615 ஆக்டா-கோர் புராசசர் வசதி உள்ளது. 2ஜிபி ரேம், 16 ஜிபி இன்டர்னல் மெமரி, 32 ஜிபிவரை விரிவாக்கம் செய்யும் மெமரி வசதி ஆகியவையும் இந்த செல்போனின் சிறப்பம்சங்கள்.

ஆப்பிள் ஐபோன் 6எஸ்

ஆப்பிள் ஐபோன் 6எஸ்

யுரேகா செல்போனைவிட சுமார் 5 மடங்கு அதிக விலையை கொண்டிருந்தாலும், ஆப்பிள் நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட புதிய படைப்பான ஐபோன்6, கூகுளில் அதிகப்படியாக தேடப்பட்ட செல்போன் வரிசையில் 2வது இடத்தை பிடித்துள்ளது. டெஸ்க்-டாப் கம்ப்யூட்டருக்கு ஈடான செல்பாட்டை கொண்டிருந்த ஐபோன்6, 12 மெகாபிக்சல் காமிரா, 4கே வீடியோ பதிவு வசதி கொண்டது.

லெனோவா

லெனோவா

கூகுள் தேடலில் அடுத்த இடம் சாம்சங் தயாரிப்புக்கு என்று நினைத்தீர்களானால் ஏமாற்றமே. மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது லெனோவோ கே3 நோட். மார்ச் மாதம் இந்த செல்போன் அறிமுகம் செய்யப்பட்டது. 1.7ஜிஹெச்இசெட் ஆக்டா-கோர் மீடியா டெக் புராசசர் கொண்ட இந்த செல்போனில் 2 ஜிபி ரேம் உள்ளது. 16 ஜிபி மற்றும் 32 ஜிபி உள் மற்றும் விரிவாக்க மெமரி வசதி கொண்டது. 13 மெகாபிக்சல் காமிரா, 5 மெகாபிக்சல் ஃபிரன்ட் காமிரா ஆகியவற்றுடன் வந்த இந்த செல்போனின் விலை ரூ.9999 என்பது கூடுதல் கவர்ச்சிக்கு காரணம்.

மீண்டும் ஒரு லெனோவா

மீண்டும் ஒரு லெனோவா

கூகுள் தேடுதலில் 4வது இடத்தையும் பிடித்துள்ளது லெனோவோ. இதன் ஏ7000 வகை செல்போனுக்கு இந்த புகழ் கிடைத்துள்ளது. சீனாவின் இந்த தயாரிப்பு 5.5 இன்ச் ஹெச்டி திரை கொண்டது. 2ஜிபி ரேம், 8 மெகாபிக்சல் காமிரா, 5 மெகா பிக்சல் ஃபிரன்ட் காமிரா, 4ஜி வசதிகளை கொண்டது. உள் மெமரி 8 ஜிபி.

மோட்டோ ஜி

மோட்டோ ஜி

கூகுள் தேடுதலில் மோட்டோ ஜிக்கு, 5வது இடம். ஃப்ளிப்கார்ட் மூலம் மட்டுமே இந்த செல்போன் விற்பனைக்கு கிடைக்கிறது. மோட்டோ ஜி, இரு சிம்கார்டு பொருத்தும் வசதி கொண்டது. 1 ஜிபி ரேம், 8 ஜிபி உள் மெமரி, 8 பிக்சல் காமிரா, 2 பிக்சல் ஃபிரன்ட் காமிரா வசதி கொண்டது இந்த செல்போன்.

சாம்ராஜ்ய சரிவு

சாம்ராஜ்ய சரிவு

இந்தியாவின் கூகுள் தேடுதலில், சாம்சங்கின் ஜே7 வகை செல்போன்கள் 7வது இடத்தை பிடித்துள்ளன. கடந்த ஆண்டு இந்திய ஸ்மார்ட் போன் மார்க்கெட்டில் கோலோச்சிய தென் கொரியாவின் சாம்சங்க் நிறுவனத்திற்கு இம்முறை பெரிய சரிவு. ஒரே மாதிரியான வடிவமைப்பும், தொழில்நுட்பமும் மக்களிடம் எடுபடவில்லை. முதல் 10 இடத்திற்குள் ஜே7 செல்போன் மட்டுமே வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
India’s smartphone industry had a jubilant year as both Chinese and Indian smartphone makers competed to give customers feature-rich devices at the most affordable price. As a result of this, some of the premium specifications such as 4G LTE and octa-core processor started to feature in affordable smartphones, thus bridging the digital divide in India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X