For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆக. 12 முதல் 18 வரை.. தேசிய நினைவுச் சின்னங்கள் முன்பு செல்பி எடுக்கத் தடை!

Google Oneindia Tamil News

டெல்லி: சுதந்திர தின பாதுகாப்பு நடவடிக்கையாக தேசிய நினைவுச் சின்னங்கள் முன் நின்று செல்பி எடுக்க ஆகஸ்ட் 12 ம் தேதி முதல் 18 ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

வரும் 15ம் தேதி இந்தியாவின் 70வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாட்டின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.

பல விமான நிலையங்களில் குறிப்பிட்ட தினங்கள் பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tourism Ministry issues advisory against selfies from Aug 12-18

இந்நிலையில், தற்போது தேசிய நினைவுச் சின்னங்கள் முன் நின்று செல்பி எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையை அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகம் அனுப்பி உள்ளது.

ஆகஸ்ட் 12 ம் தேதி முதல் ஆகஸ்ட் 18 ம் தேதி வரை இந்த தடை நடைமுறையில் இருக்கும். சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டுகளை விட இந்தாண்டு பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. உளவுத் துறை தகவல்களின் படி, ஐஎஸ் தீவிரவாதிகள் இம்முறை சுதந்திர தினக் கொண்டாட்டத்தை சீரழிக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. எனவே தான் இந்த கூடுதல் பாதுகாப்பு எனக் கூறப்படுகிறது.

English summary
No selfies in front of national memorials of India between August 12 and 18, read an advisory by the Tourism Ministry of India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X