For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இரட்டை இலைக்கு லஞ்சம்.. தினகரனுடன் சிக்கிய மேலும் ஒரு இடைத்தரகர் இன்று கைது?

இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுக்கப்பட்ட வழக்கில் டிடிவி தினகரன் நள்ளிரவு கைது செய்யப்பட்டார். அவருடன் தொடர்புடைய ஷா பைசல் என்பவர் இன்று கைது செய்யப்படலாம் என்று டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்

Google Oneindia Tamil News

டெல்லி: இரட்டை இலைச் சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்த புகாரில் டிடிவி தினகரனை டெல்லி போலீசார் நள்ளிரவில் கைது செய்தனர். நான்கு நாட்கள் தொடர் விசாரணைக்குப் பிறகு டெல்லி போலீசார், நள்ளிரவில் டிடிவி தினகரனையும் அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவையும் கைது செய்துள்ளனர்.

அதிமுகவின் இரு அணிகளும் இரட்டை இலைச் சின்னத்துக்கு போட்டி போட்டதால் தேர்தல் ஆணையம் இரட்டை இலையை முடக்கியது. இதுதொடர்பான வழக்கு தேர்தல் ஆணையத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க பெங்களூரைச் சேர்ந்த சுகேஷ் சந்திரா என்ற இடைத்தரகர் மூலம் முயன்றதாக டிடிவி தினகரன் மீது டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்தது.

புகார்

புகார்

இரட்டை இலைச் சின்னத்தை பெற்றுத் தருமாறு கூறி ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் லஞ்சமாக சுகேஷிடம் தினகரன் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, தெற்கு டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த சுகேஷ் சந்திராவிடம் இருந்து ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் பணத்தை கடந்த 17ஆம் தேதி டெல்லி போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் இருந்து தினகரனுக்கு பிரச்சனை உச்சமடைந்தது.

36 மணி நேர விசாரணை

36 மணி நேர விசாரணை

இதனைத் தொடர்ந்து டிடிவி தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா மற்றும் அவரது உதவியாளர் ஜனார்த்தன் ஆகியோரிடம் டெல்லிப் போலீசார் தொடர்ந்து 4 நாட்கள் விசாரணை நடத்தினார்கள். சுமார் தினகரனிடம் 36 மணி நேரம் விசாரணை நடத்திய பின்னர் நள்ளிரவு கைது செய்யப்பட்டார்.

ரகசியம் அம்பலம்

ரகசியம் அம்பலம்

இந்த விசாரணையின் போது பல்வேறு ரகசிய தகவல்களும், பணப்பரிமாற்ற விவரங்களும் வெளியானதாக டெல்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த விசாரணையின் போது இன்னொரு இடைத்தரகரான ஷா பைசல் என்பவர் பற்றிய தகவலும் கிடைத்துள்ளன. ஷா பைசலை சுகேஷ் சந்திரா அடையாளம் காட்டியதாகக் கூறப்படுகிறது.

ஷா பைசல் ஆஜர்

ஷா பைசல் ஆஜர்

இதனையடுத்து ஷா பைசல் இன்று நேரில் ஆஜராக வேண்டும் என்று டெல்லி போலீசார் உத்தரவிட்டுள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தும் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது. அதே நேரம் அவர் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகளும் இருப்பதாக தெரிகிறது.

English summary
Two leaves bribery case, one more agent Sha Faisal will be inquired today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X