For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கடிவாளத்தை கழட்டிவிட்ட உச்சநீதிமன்றம்...ஹேப்பி.. ஹேப்பி. கொண்டாடும் சமூகவலைதள'வாலு'கள்!!

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: ஃபேஸ்புக், ட்விட்டர் உட்பட சமூக வலைதளங்களே கதியென குடியியிருந்து கொண்டு உலகின் அத்தனை கண்டத்து நடவடிக்கைகளையும் வார்த்தைகளால் வறுத்தெடுத்துக் கொண்டிருக்கும் வலைவாசிகள் இன்று அப்படி ஒரு உற்சாகத்தில் மிதக்கிறார்கள்.. அவர்களுக்கு கடிவாளம் போட்டுக் கொண்டிருந்த தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் 66வது ஏ பிரிவை உச்சநீதிமன்றம் ரத்து செய்துவிட்டதுதான் காரணம்..

Upbeat, Defiant, Happy Twitter Users Celebrate #No66A

மத்திய அரசு 2008ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் 66-ஏ பிரிவு என்கிற திருத்தத்தைக் கொண்டு வந்தது. இதனடிப்படையில் சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்தால் 3 ஆண்டுகால சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும் என்ற நிலைமை உருவானது.

Upbeat, Defiant, Happy Twitter Users Celebrate #No66A

இதனடிப்படையில் நாடு முழுவதும் சில கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு பெரும் பரபரப்பையும் கிலியையும் ஏற்படுத்தியது. இந்நிலையில்தான் 66-ஏ பிரிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தின் பொதுநலன் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று 66-ஏ பிரிவை ரத்து செய்து அதிரடியாக உத்தரவிட்டது.

நல்ல காலத்துலேயே 'நர்த்தனமாடும்' வலைவாசிகளின் கருத்து மூளைகள் இந்த 66-ஏ கடிவாளம் கழற்றப்பட்ட பிறகு வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த தீர்ப்பு வந்த பிறகு எப்படியெல்லாம் நடனமாடும் என சொல்லவா வேண்டும்?

Upbeat, Defiant, Happy Twitter Users Celebrate #No66A

ட்விட்டருக்குப் போனா "#No66A", #sec66A என்ற பல ஹேஸ்டேக்குகள் போட்டு ட்விட்டர் குடிமகன்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்..

ஃபேஸ்புக் போனா 66-ஏ பற்றி பக்கம் பக்கமா எழுதித் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள் கருத்து கந்தசாமிகள்.

ஆனாலும் ஏக இஷ்டத்துக்கு விமர்சித்துவிட எந்த ஒரு சட்டமும் அனுமதிக்கவில்லை என்பதையும் வலைவாலுகள் நினைவில் கொள்ளவும் வேண்டும்.

English summary
In what is being termed as a historic judgement, the Supreme Court on Tuesday struck down the controversial Section 66A of the Information Technology Act, declaring it "unconstitutional". The section, which was often misused to arrest ordinary citizens for liking, commenting, tweeting or sharing "controversial" information, was passed without discussion in Parliament by the UPA government in 2008.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X