யூரி தாக்குதலுக்கு பதிலடி: பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 20 தீவிரவாதிகளை கொன்ற இந்திய ராணுவம்?

By:

ஸ்ரீநகர்: யூரி தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மூன்று தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 20 தீவிரவாதிகள் பலியாகியுள்ளனர் என்று கூறப்படுகிறது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் யூரி செக்டாரில் உள்ள ராணுவ நிர்வாகத் தலைமையகத்திற்குள் புகுந்து 4 தீவிரவாதிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தினர். இந்திய ராணுவத்தினர் அந்த 4 தீவிரவாதிகளையும் சுட்டுக் கொன்றுவிட்டனர். ஆனால் ராணுவ வீரர்கள் 18 பேர் பலியாகினர்.

Uri Avenged As Spl Forces Cross LoC, Kill 20 Terrorists

இந்நிலையில் நேற்று இரவு 18 முதல் 20 இந்திய வீரர்கள் ராணுவ ஹெலிகாப்டர்களில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்கு சென்றனர். அங்கு செயல்பட்டு வரும் 3 தீவிரவாத முகாம்கள் மீது அவர்கள் தாக்குதல் நடத்தினர்.

Read This: நாங்கள் சிங்கத்தின் பிள்ளைகள்.. பாகிஸ்தான் என்ற நாடு இருக்காது.. வைரலாகும் ராணுவ வீரர்களின் வார்னிங்

யூரி தாக்குதலுக்கு பதிலடியாக நடந்த இந்த தாக்குதலில் 20 தீவிரவாதிகள் பலியாகியுள்ளனர், 180 காயம் அடைந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் விமானங்கள் பறக்க பாகிஸ்தான் தடை விதித்திருந்தது.

இந்நிலையில் இந்திய ராணுவம் நேற்று இரவு அப்பகுதிக்கு ஹெலிகாப்டர்களில் சென்று தாக்குதல் நடத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
In the aftermath of the Uri attack that has evoked strong responses from several countries and leaders, 20 terrorists were killed by the Indian Army in a cross border operation.
Please Wait while comments are loading...

Videos