ஜியோ சிம்கள் ஹோம் டெலிவரி செய்யப்படும்.. 5 நிமிடத்தில் ஆக்டிவேஷன்: முகேஷ் அம்பானி

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஆன் லைனில் முகவரி சரிபார்த்து 5 நிமிடத்தில் “சிம்” ஆக்டிவேஷன் செய்யப்படும் என்று முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

மும்பை: ஜியோ வாடிக்கையாளர்களுக்கு ஆன் லைனில் கேஒய்சி மூலம் சோதித்து பார்த்து 5 நிமிடத்தில் சிம் ஆக்டிவேஷன் செய்யப்படும் என்றும், சிம்கார்டுகள் வீட்டில் விநியோகிக்கப்படும் என்றும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.

ஜியோ மணி என்னும் அப்ளிகேஷனை மும்பையில் தொடங்கி வைத்த அவர் இதனைத் தெரிவித்தார். இதனை வருகிற 5 ஆம் தேதி முதல் அனைத்து விற்பனையாளர்களும் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்றும் அம்பானி கூறினார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது: ஜியோ வாடிக்கையாளர்கள் பிற நிறுவனங்களின் அகண்டவரிசை சேவையைவிடவும் 25 மடங்கு அதிக அளவிலான தரவுகளை பயன்படுத்தி பலன் அடைந்து வருவதாகவும் அம்பானி தெரிவித்தார்.

Users can get a Jio sim activated and home delivered in just 5 mins  through eKYC

வருகிற 2017-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் கனணி மயமாக்கப்பட்ட ரிலையன்ஸ் ஜியோ சில்லறை விற்பனை நிலையங்களை 4 லட்சம் அளவுக்கு அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் அம்பானி தெரிவித்தார். அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் புத்தாண்டு சலுகை என்ற பெயரில் இலவச சேவை மார்ச் இறுதிவரை கிடைக்கும் என்றும், வேறு நிறுவன நெட்வொர்க்குகளிலிருந்து, ஜியோவுக்கு மாறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் அம்பானி கூறினார்.

சிம்கார்டுகளை ஹோம் டெலிவரி செய்ய உள்ளதாகவும், 5 நிமிடத்தில் ஆக்டிவேஷன் செய்து தரப்படும் என்றும் அவர் கூறினார்.

English summary
Ambani says Users can get a Jio sim activated and home delivered in just 5 mins through eKYC
Please Wait while comments are loading...