உத்தர்காண்ட் முதல்வர் விஜய் பகுகுணாவை மாற்றுகிறது காங்கிரஸ்!

Posted by:
 
Share this on your social network:
   Facebook Twitter Google+    Comments Mail

டேராடூன்: உத்தர்காண்ட் மாநில முதல்வராக இருந்து வரும் விஜய் பகுகுணாவை மாற்ற காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது.

உத்தர்காண்ட் மாநிலத்தில் உள்ள 5 லோக்சபா தொகுதிகளிலும் காங்கிரசே வென்றது. ஆனால் அண்மைக்காலமாக முதல்வர் விஜய் பகுகுணா ஆட்சி மீது உத்தர்காண்ட் மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதால் காங்கிரஸ் மேலிடம் அச்சம் கொண்டிருக்கிறது.

உத்தர்காண்ட் முதல்வர் விஜய் பகுகுணாவை மாற்றுகிறது காங்கிரஸ்!

குறிப்பாக மழை வெள்ள பாதிப்பில் அவர் சரியாக செயல்படவில்லை என்று கருதப்படுகிறது. இதனால் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பாதிப்பு ஏற்படக் கூடும் என்பது காங்கிரஸ் மேலிடத்தின் கருத்து.

இதைத் தொடர்ந்து உத்தரகாண்ட் மாநிலத்தில் கட்சியிலும், ஆட்சியிலும் சில நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டாக முதல்வர் பதவியில் இருக்கும் விஜய் பகுகுணாவை நீக்க காங்கிரஸ் மேலிட தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

சோனியா ஒப்புதல் கிடைத்ததும் பகுகுணாவை பதவி விலக செய்யும் நடவடிக்கைகள் தொடங்கும். புதிய முதல்வர் பதவிக்கு மத்திய அமைச்சர் ஹரீஷ்ராவத் பெயர் அடிபடுகிறது. இதனால் விஜய் பகுகுணா ஆதரவாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

English summary
Congress is mulling over the removal of Vijay Bahuguna as chief minister of Uttarakhand, aiming to recalibrate the balance of power in the dissidence-ridden state unit ahead of 2014 elections.
Write a Comment