For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாஜக தலைமையுடன் மோதல்?: டெல்லி வந்தும் அமித்ஷா, மோடியை புறக்கணித்த வசுந்தரா ராஜே

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: ஐபிஎல் மாஜி தலைவர் லலித் மோடிக்கு உதவி செய்த குற்றச்சாட்டுக்கு உள்ளான ராஜஸ்தான் முதல்வர் வசுதந்தராஜே சிந்தியா, இன்று டெல்லி நிதி ஆயோக் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றபோதிலும், பிரதமர் மோடியையோ, பாஜக தலைவர் அமித்ஷாவையோ சந்திக்காமல் கிளம்பி சென்றார்.

டெல்லியில் இன்று நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. அதில் பல மாநில முதல்வர்கள் பங்கேற்றனர். ராஜஸ்தான் முதல்வரான பாஜகவின் வசுந்தராவும் அதில் பங்கேற்றார். ஆனால், பிரதமர் நரேந்திரமோடியையோ அல்லது, பாஜக தலைவர் அமித்ஷாவையோ அவர் சந்திக்கவில்லை.

Vasundhara Raje leaves Delhi without meeting BJP top brass

ஐபிஎல் மோசடி மன்னன் லலித் மோடிக்கு, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை போன்றே, வசுந்தராஜேவும் உதவி செய்ததாக கூறப்படுகிறது. இந்த சர்ச்சை பூதாகரமாக வெடித்த நிலையிலும், மேலிடத் தலைவர்களிடம் தனது நிலைப்பாட்டை வசுந்தரா இதுவரை நேரில் சந்தித்து தெளிவுபடுத்தவில்லை.

பஞ்சாப்பில் நடைபெறவிருந்த அமித்ஷாவுடனன ஆலோசனையை, கடைசி நேரத்தில் போகாமல் தவிர்த்துவிட்டார் வசுந்தரா. இன்று டெல்லியிலும் அவர் தனது சந்திப்பை தவிர்த்துள்ளார்.

English summary
Embattled Rajasthan Chief Minister Vasundhara Raje today attended a NITI Aayog deliberation here but left the capital without meeting either Prime Minister Narendra Modi or BJP chief Amit Shah.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X