For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெண் வக்கீல் ஆடை மாற்றிய அறைக்குள் எட்டிப் பார்த்த துணிக்கடை ஊழியர் கைது!

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூர்: பெண் வழக்கறிஞர் ஆடை மாற்றிய அறைக்குள் எட்டிப் பார்த்த ஆடை ஷோரூம் ஊழியர் கைது செய்யப்பட்டார்.

பெங்களூர், யஷ்வந்த்பூர் பகுதியிலுள்ள நியூ பெல் சாலையில் பிரபல ஆடை விற்பனை ஷோரூம் உள்ளது. சம்பவத்தன்று, வழக்கறிஞரான ரியா (35), அந்த ஷோரூமுக்கு சென்று ஜாக்கெட் வாங்கியுள்ளார். ஆடை மாற்றும் அறையில் சென்று அதை டிரையல் பார்த்துள்ளார்.

அப்போது, அக்கடையில் வேலை பார்க்கும், 23 வயதான அருண் குமார் என்ற இளைஞர், ரியா ஆடை மாற்றும் அறைக்குள் எட்டிப் பார்த்ததாக கூறப்படுகிறது.

அதிர்ச்சியடைந்த ரியா, உடநடியாக காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தார். "நான் ஆடை மாற்றிக்கொண்டு, மோசமான நிலையில் இருக்கும்போது, கடை ஊழியர் எட்டி பார்த்துவிட்டார்" என்று புகாரில் தெரிவித்தார். இதையடுத்து அருண் குமார் மீது பெண்ணின் மாண்பை குலைத்த குற்றத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர்.

English summary
A woman lawyer has accused a salesman from a renowned chain of cloth stores located on New BEL road of peeping into the trial room and outraging her modesty while she was trying on a blouse.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X