For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போர் விமானங்களை குவிக்கும் பாக்.! எல்லையில் போர் பீதி

இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் போர் விமானங்களை குவித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

By Devarajan
Google Oneindia Tamil News

டெல்லி : இந்தியா- பாகிஸ்தானுக்கு இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் எல்லைவாசிகள் அச்சத்தில் உள்ளனர்.

கடந்த சில வாரங்களாகவே இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தீவிரவாத ஊருடுவல் மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதல் போன்றவற்றை தொடர்ந்து இந்திய ராணுவம் கண்காணித்து வந்தது.

War mode activated; Pakistani fighter jets have flown close to the Siachen

இந்நிலையில் நேற்று இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் உள்ள பாகிஸ்தான் ராணுவத்தின் பதுங்கு குழிகளின் மீது இந்திய ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியது. இந்திய எல்லைக்குள் தீவிரவாதிகள் ஊருடுவ பாகிஸ்தான் ராணுவம் உதவி செய்வதால், இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்திய ராணுவம் விளக்கமளிப்பட்டது.

இந்திய ராணுவத்தின் இந்த தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் எல்லை பகுதியில் அதிக ராணுவ வீரர்கள் , ஆயுதங்கள் குவித்து வருகிறது. மேலும் எல்லைப்பகுதியில் பாகிஸ்தானின் போர் விமானங்கள் வானில் உலவி வருகிறது. இதனால் இந்தியா- பாகிஸ்தானுக்கு இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எல்லைவாசிகள் அச்சத்தில் உள்ளனர்.

ஆனால் எல்லையில் பாகிஸ்தான் ராணுவ போர் விமானங்கள் எதுவும் பறக்கவில்லை என்று இந்திய ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Pakistani fighter jets have flown close to the Siachen glacier and forward bases have been activated, reports in the Pakistan media claim.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X