For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மே.வங்க உள்ளாட்சி தேர்தல்.. 'கில்லி'யாக பெரும்பான்மை இடங்களை 'அள்ளிய' மமதாவின் திரிணாமுல்!!

By Mathi
Google Oneindia Tamil News

கொல்கத்தா: மேற்கு வங்க மாநில உள்ளாட்சித் தேர்தலில் பெரும்பாலான இடங்களில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே கைப்பற்றியுள்ளது. இம்மாநிலத்தில் காலூன்றி விடலாம் என கனவு கண்டன பாரதிய ஜனதாவால் சொற்ப இடங்களைத்தான் கைப்பற்ற முடிந்துள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஏப்ரல் 18 மற்றும் ஏப்ரல் 25 ஆகிய 2 கட்டமாக நடைபெற்றது. இத்தேர்தல்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

WB municipal corporation: Trinamool Congress sweeps KMC

வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே பெரும்பாலான இடங்களில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிதான் முன்னிலை வகித்தது.

  • மேற்கு வங்கத்தின் மொத்தம் 91 நகராட்சிகளில் 71 நகராட்சிகளை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியுள்ளது.
  • 144 வார்டுகளைக் கொண்ட கொல்கத்தா மாநகராட்சியில் 114 இடங்களை திரிணாமுல் காங்கிரஸும் 16 இடங்களை இடதுசாரிகளும் வென்றுள்ளன.
  • கொல்கத்தா மாநகராட்சி மேயரும் திரிணாமுல் வேட்பாளருமான ஸ்வன் சட்டோபத்யாய 5,500 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்.

  • கொல்கத்தா துணை மேயரான திரிணாமுல் காங்கிரசின் ஃபர்ஷானா ஆலம் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி வேட்பாளரிடம் தோல்வியைத் தழுவினார்.
  • கொல்கத்தா மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவரும் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளருமான ரூபா பாக்சி தோல்வியைத் தழுவியுள்ளார்.
  • இந்த தேர்தல் வெற்றி குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள திரிணாமுல் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி, வெற்றியை மக்களிடம் சமர்பிப்பதாக பதிவிட்டுள்ளார். அதே நேரத்தில் நிலநடுக்க பேரிழப்பால் வெற்றி விழா கொண்டாட்டங்களைத் தவிர்க்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
English summary
West Bengal Chief Minister Mamata Banerjee-led Trinamool Congress is leading in 71 out of 91 civic bodies even as counting of votes in the recently-concluded West Bengal municipal corporation elections is underway on Tuesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X