பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட விடாமல் தடுக்கும் சிந்து நதி ஒப்பந்தம்!

டெல்லி: பாகிஸ்தானுக்கு செல்லும், சிந்து நதிநீரை திசை திருப்பி அதன் தீவிரவாத ஆதரவு செயல்பாடுகளுக்கு பதிலடி தர இந்தியா தயாராகி வருகிறது. ஆனால் இதற்கு தடையாக உள்ளது சிந்து நதி தொடர்பாக பாகிஸ்தானுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒரு ஒப்பந்தம்.

அந்த ஒப்பந்தம் என்ன என்பது குறித்து தெரிய வேண்டுமா.. அது இதுதான்:

சுதந்திரத்திற்கு பிறகு, இந்தியா, பாகிஸ்தான் என்ற ஒரு நாட்டை பிரசவித்தது. முகமது அலி ஜின்னா, ரொம்பவே பிடிவாதம் பிடித்து நாட்டை பிரித்துக்கொண்டாலும், வறண்ட பூமியான, அந்த நாட்டுக்கான தண்ணீர் தேவையையும் இந்தியாவே பூர்த்தி செய்ய வேண்டியிருந்தது.

Whats is The Indus Waters Treaty means

இதற்காகவே, 1960 செப்டம்பர் 19ம் தேதி அப்போதைய இந்திய பிரதமர் ஜவகர்லால் நேரு மற்றும் பாகிஸ்தான் அதிபர் ஆயுப் கான் நடுவே கராச்சியில் வைத்து சிந்து நதி ஒப்பந்தம் கையெழுத்தானது. உலக வங்கி பிரதிநிதிகள் முன்னிலையில், ஒப்பந்தம் கையெழுத்தானது.

பியஸ், ரவி மற்றும் சட்லஜ் ஆகிய மூன்று நதிகளின் கட்டுப்பாடு இந்தியாவுக்கு வழங்கப்பட்டது. சிந்து, சீனப் மற்றும் ஜீலம் ஆகிய மூன்று நதிகளின் கட்டுப்பாடு பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டது.

இந்தியாவில் உற்பத்தியாகி, இந்தியாவில் பாய்ந்த பிறகே பாகிஸ்தான் பாயும் நதிகள் இவை என்பதால் அந்த நதிகளில் இந்தியா சிறிது பங்கிட்டு கொள்ளவும் ஒப்பந்தத்தில் வகை செய்யப்பட்டது. குறிப்காக விவசாயம், போக்குவரத்து மற்றும் மின் உற்பத்தி ஆகியவற்றுக்கு அந்த தண்ணீரை இந்தியா பயன்படுத்திக்கொள்ளலாம்.

இமய மலையில் உற்பத்தியாகி பாயும், சிந்து நதியில் 20 சதவீதம் மட்டுமே இந்தியா பயன்படுத்த முடியும். ஆனால், இந்தியா-பாகிஸ்தான் நடுவேயான போர்களின்போது, இந்தியா இந்த ஒப்பந்தத்தை மீறி நதிநீரை நிறுத்தவில்லை. பாகிஸ்தானுக்கு அந்த அச்சம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஏனெனில் இந்தியா, இந்த தண்ணீரை திசை திருப்பிவிட்டால் பாகிஸ்தான் பாலைவனமாகும். ஆனால், நேரு போட்ட ஒப்பந்தத்தை மதித்து இதுவரை இந்தியா அந்த செயலில் இறங்கவில்லை. இப்போது மோடி அரசு பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட சிந்து நதி விவகாரத்தை கையிலெடுக்க போவதாக மிரட்டியுள்ளது.

இதுவரை உலக நாடுகள் நடுவே மேற்கொள்ளப்பட்ட நதிநீர் ஒப்பந்தங்களிலேயே மிகவும் வெற்றிகரமாக செயல்பட்டுவரும் ஒப்பந்தம் இதுதான் என்கிறார்கள்.

English summary
The Indus Waters Treaty is a water-distribution treaty between India and Pakistan, brokered by the World Bank (then the International Bank for Reconstruction and Development).
Please Wait while comments are loading...

Videos