For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒரு உண்மை தெரிஞ்சாகனும்... மோடி, ஜேட்லிட உட்பட 40 மத்திய அமைச்சர்கள் ரொக்கத்தை என்ன செஞ்சாங்க?

மோடி, ஜேட்லி உட்பட மத்திய அமைச்சர்கள் தங்களது கைவசம் இருந்த ரொக்கத்தை என்ன செய்தார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: தங்களது கையில் அதிகளவு ரொக்கம் வைத்திருந்த பிரதமர் மோடி மற்றும் 40 மத்திய அமைச்சர்கள் அவற்றை வங்கிகளில் டெபாசிட் செய்தனரா? அவர்களுக்கும் அனைவருக்கும் போல அபராதம் விதிக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மத்திய அமைச்சர்கள் தங்களது சொத்து விவரம் குறித்து பிரதமர் அலுவலகத்துக்கு ஆண்டுதோறும் அறிக்கை அளிப்பது வழக்கம். இதன்படி கடந்த மார்ச் மாதத்தில் மத்திய அமைச்சர்கள் பலரும் தங்களது சொத்து விவரங்களையும் ரொக்க கையிருப்பு விவரங்களையும் பிரதமர் அலுவலகத்தில் சமர்ப்பித்தனர்.

ஜேட்லியின் ரூ65 லட்சம்

ஜேட்லியின் ரூ65 லட்சம்

இவர்களில் ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை நாள்தோறும் நியாயப்படுத்தி வரும் நிதி அமைச்சர் அருண்ஜேட்லிதான் மிக அதிகமான ரொக்கத்தை கையிருப்பாக வைத்திருக்கிறார். அதாவது மொத்தம் ரூ65 லட்சம் தம்முடைய ரொக்க கையிருப்பு என ஜேட்லி கூறியிருக்கிறார்.

மோடியின் ரூ.89,700

மோடியின் ரூ.89,700

ஜேட்லிக்கு அடுத்ததாக இணை அமைச்சர்கள் ஸ்ரீபத் எசோ நாயக் ரூ.22 லட்சம் ரொக்கமும், ஹன்ஸ்ராஜ் ஆஹிர் ரூ.10 லட்சத்துக்கு அதிகமாகவும் வைத்துள்ளனர். பிரதமர் மோடியைப் பொறுத்தவரையில் தம் வசம் ரூ.89,700 ரொக்கம் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

23 அமைச்சர்கள்...

23 அமைச்சர்கள்...

மேலும் 23 அமைச்சர்கள் தங்களிடம் ரூ.2 லட்சத்துக்குக் குறைவான ரொக்கம்தான் இருக்கிறது என கூறியுள்ளனர். 15 அமைச்சர்களிடம் 2.5 லட்சத்துக்கு மேல் ரொக்கம் உள்ளதாம்.

விவரமே தாக்கல் செய்யலை

விவரமே தாக்கல் செய்யலை

அமைச்சர்கள் நிதின் கட்கரி, மனோகர் பரிக்கர், உமாபாரதி, பொன்ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் தங்கள் சொத்து விவரங்களை பிரதமர் அலுவலகத்துக்கு இன்னமும் அளிக்கவில்லை. நாடு முழுவதும் ரூபாய்நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் பொதுமக்கள் தங்களிடம் இருந்த ரூபாய் நோட்டுகளை கால்கடுக்க வங்கியில் நின்று டெபாசிட் செய்து வருகின்றனர்.

என்னாச்சு அந்த பணம்

என்னாச்சு அந்த பணம்

அதிலும் ரூ2.5 லட்சத்துக்கும் மேல் டெபாசிட் செய்தால் பல்வேறு அபராதங்களும் விதிக்கப்படுகின்றன. அப்படியானால் தங்களிடம் ரொக்கமாக இவ்வளவு பணம் இருக்கிறது என அறிக்கையாகவே தாக்கல் செய்த பிரதமர் மோடி, ஜேட்லி உட்பட 40 மத்திய அமைச்சர்கள் தங்களது தொகையை என்ன செய்தார்கள்? புதிய நோட்டுகளாக மாற்றினார்களா? அவர்களுக்கும் அபராதங்கள் விதிக்கப்பட்டனவா? என்ற கேள்வி நாடு முழுவதும் எழுந்துள்ளது.

நியாயம்தான்! உண்மை தெரிஞ்சே ஆகனும்!

English summary
Now a report has emerged that a number of ministers had large cash holdings in their possession.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X