For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தியாவின் தந்தை ஜான்டி ரோட்ஸ்… கலக்கும் ட்விட்டரிஸ்ட்கள்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

நம்ம நெட்டிசன்களுக்கு ஏதாவது விசயம் சிக்கினால் போதும் அதை அக்குவேறு ஆணி வேறாக பிரித்து மேய்ந்து ட்விட்டரில் ட்ரெண்ட் ஆக்கிவிடுவார்கள்.

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்ஸ்க்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. அதற்கு இந்தியா என்று பெயர் சூட்டினாலும் சூட்டினார் அவருக்கு வாழ்த்து மழைகளை பெய்த ட்விட்டரிஸ்ட்டுகள் அவரை இந்தியாவின் தந்தையாகவே கொண்டாடி வருகின்றனர்.

ட்விட்டரில் ஜான்டி ரோட்ஸ் என்ற பெயரையே ட்ரெண்ட் செட் ஆக்கி அவரைப் பற்றிய தகவல்களை பதிவிட்டு வருகின்றனர்.

இந்தியாவின் தந்தை யார்?

மகாத்மா காந்தி இல்லை... அது ஜான்டி ரோட்ஸ்தான். ஏனென்றால் அவர்தானே தன்னுடைய குழந்தைக்கு இந்தியா என்று பெயர் வைத்திருக்கிறார்.

அழகான பெயர்கள்

இந்தியா என்று ஜான்டி ரோட்ஸ் பெயர் வைத்ததற்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாழ்த்து கூறியுள்ளது. அதோடு சில பெயர்கள் மட்டுமே அழகானதாக அமையும். ஷாருக்கான் தன் மகனுக்கு அப்ராம் கான் என்று பெயரிட்டுள்ளார் அதேபோல ஜான்டி ரோட்ஸ் தன்னுடைய மகளுக்கு இந்தியா என்று பெயரிட்டுள்ளார் என்று கருத்திட்டுள்ளது.

பையன் பிறந்த பாரத்

ஜான்ட் ரோட்ஸ்க்கு பெண் குழந்தை பிறந்ததால் இந்தியா என்று பெயர் வைத்தார். இதுவே பையனாக இருந்திருந்தால் பாரத் என்று பெயரிட்டிருக்கலாம் என்று கூறியுள்ளார் ஒரு ட்விட்டர்வாசி.

இந்த லொள்ளுதானே வேணாங்கிறது

டீச்சர்: இந்தியாவின் தந்தை யார்

மாணவி : ஜான்டி ரோட்ஸ்

டீச்சர் : என்ன லொள்ளா?

மாணவி: ஐயோ இல்லை டீச்சர்... ட்விட்டரை பாருங்க... எல்லாரும் சொல்லியிருக்காங்க.

மாணவியின் பதிலில் டீச்சருக்கு மயக்கம் வராத குறைதான் என்று பதிவிட்டுள்ளார் ஒரு வலைஞர்.

அது சரி இன்னும் என்னென்ன சொல்லப்போறாங்களோ பொறுத்திருந்து பார்க்கலாம்.

English summary
Who Is The Father Of India? No No.. It's Not Mahatma Gandhi.. It's Jonty Rhodes He Named His New Born. Some very beautiful names of new babies. SRK's son: AbRAM Khan. now, Jonty Rhodes daughter: INDIA Jeanne Rhodes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X