For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாலை பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து நாளை பஸ்- லாரி சங்கங்கள் ஸ்டிரைக்!- சட்டம் சொல்வது என்ன?

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: சாலை பாதுகாப்பு சட்ட மசோதாவை எதிர்த்து வரும் 30ம்தேதி, நாடு முழுவதும், லாரி, பஸ், ஆட்டோ சங்கங்கள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்புவிடுத்துள்ளன.

சாலை போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு சட்டம்-2014 என்ற பெயரிலான மசோதாவை மத்திய அரசு நிறைவேற்ற முடிவு செய்துள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே சாலை விபத்தில் இறந்ததை தொடர்ந்து, சாலை பாதுகாப்பின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு இச்சட்டம் கொண்டுவரப்படுகிறது.

Why bus, auto unions are protesting, call for bandh on April 30: Explained

இந்த சட்டம் வந்தால், வாகன ஓட்டிகள், வாகன உரிமையாளர்கள் பாடு திண்டாட்டமாகிவிடும். எனவே, சட்டத்தை எதிர்க்கின்றனர் தொழிலாளர் சங்கங்கள்.

சட்டம் எனன சொல்கிறது:

  • வாகன ஒழுங்குமுறை மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையத்தை இந்த சட்டம் வலுப்படுத்தும்.
  • வாகனங்களுக்கு, சாலை பயனாளர்களுக்கு குறைந்தபட்ச பாதுகாப்பு அம்சங்களை ஆணையம் வழங்க சட்டம் உதவும்.
  • இந்த ஆணையமானது, தேசிய அளவிலான வாகன தகவல்களை சேகரித்து வைக்க முடியும்.
  • வாகன பதிவு எண், டிரைவிங் லைசென்ஸ், இன்சூரன்ஸ், பெர்மிட்டுகள், அபராதங்கள், விபத்துகள் போன்ற விவரங்களை அந்த ஆணையம் பதிவு செய்து வைத்திருக்கும்.
  • ஒருவரே ஒன்றுக்கும் மேற்பட்ட லைசென்சுகள் வைக்க முடியாது.
  • டிராபிக் விதிமீறல்களை கண்காணித்து, அவற்றுக்கு புள்ளிகள் கொடுக்கும் ஆணையம்.
  • அபராத புள்ளிகளை, டிரைவர்களின் லைசென்சை பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
  • 12 புள்ளிகள் சேர்ந்துவிட்டால், டிரைவரின் லைசென்சை ஓராண்டுக்கு சஸ்பெண்ட் செய்ய முடியும்.
  • அபராதம் தவிர்த்து, சிறை தண்டனை விதிக்கவும் சட்டத்தில் இடம் உள்ளது.
  • பஸ், ஆட்டோ யூனியன்கள் எதிர்ப்பது ஏன்?
  • பல ஆயிரம் டிரைவர்கள், நடுத்துநர்கள், பிற பணியாளர்கள் இந்த சட்டத்தால் பணியிழப்பார்கள்.
  • அரசு போக்குவரத்து கழகங்கள் அனைத்தும் மூடப்படும்.
  • தற்போதைய மோட்டார் வாகன சட்டத்தில், உள்ள பலன்கள் ரத்தாகிவிடும்.
  • மோட்டார் வாகன இன்சூரன்ஸ்சுகள், ஃபிட்னஸ் சான்றுகள், டிரைவிங் லைசென்ஸ் போன்றவற்றை அளிக்கும் உரிமை தனியாருக்கு சென்றுவிடும்.
  • மாநில அரசிடமிருந்த போக்குவரத்து துறை அதிகாரங்கள், மாநில அரசுக்கு சென்றுவிடும்.
  • போராடுவது யார்?
  • அனைத்திந்திய சாலை போக்குவரத்து ஊழியர் பேரமைப்பின் கீழ் உள்ள, சிஐடியூ, ஏஐடியூசி, ஐஎன்டியூசி, பிஎம்எஸ், ஹெச்எம்எஸ், ஏஐசிசிடியூ மற்றும் தனியார் மாநில சங்கங்கள், தமிழ்நாட்டின் எல்பிஎப், உத்தர பிரதேச ரோடுவேஸ், குஜராத் மாநில போக்குவரத்து பணியாளர் கூட்டமைப்பு, உத்தரகாண்ட் ரோடுவேஸ் போன்றவை ஆதரவு தெரிவித்துள்ளன.
  • மொத்தம் 7.5 லட்சம் தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்பர்.
  • பெங்களூரு, கொல்கத்தா, மும்பை, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஆட்டோ டிரைவர்களும் அன்றையதினம் வேலை நிறுத்தம் செய்கின்றனர்.
English summary
All India Road Transport Workers' (AIRTW) Federations called for a nation-wide bandh on Thursday, April 30. The bandh has been called to protest against proposed Road Transport and Safety Bill 2014.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X