For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஒவ்வொரு மசூதியிலும் விநாயகர்-கௌரி சிலைகளை வைப்பேன்: பாஜக எம்.பி. பேச்சு

By Siva
Google Oneindia Tamil News

வாரணாசி: வாய்ப்பு கிடைத்தால் ஒவ்வொரு மசூதியிலும் விநாயகர்-கௌரி சிலைகளை வைப்பேன் என்று பாஜக எம்.பி. யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் விஷ்வ இந்து பரிஷத்தின் விராத் இந்து சம்மேளனம் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் பாஜக எம்.பி. யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டு பேசினார்.

Will install Gauri-Ganesh in every mosque, says Yogi Adityanath

அப்போது அவர் கூறுகையில்,

காசி விஸ்வநாதர் கோவிலை இடித்துவிட்டு முகலாய மன்னர் அவ்ரங்கஜீப் கியான்வாபி மசூதியை கட்டினார். இது எங்காவது நடந்துள்ளதா? இந்து சமாஜ் ஆட்கள் விஸ்வநாதரை தரிசிக்க செல்லும்போது எல்லாம் அந்த கியான்வாபி மசூதி நம்மை எரிச்சல் அடைய வைக்கிறது. அனுமதி கிடைத்தால் ஒவ்வொரு மசூதியிலும் விநாயகர், கௌரி மற்றும் நந்தி சிலைகளை வைப்பேன்.

காசிக்கு அனைவரும் வரலாம். ஆனால் மக்கா, மதீனாவுக்கு முஸ்லீம்கள் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். இது இந்துத்துவத்தின் நூற்றாண்டு. இந்தியாவில் மட்டும் அல்ல உலகம் முழுவதும் இந்துத்துவத்தின் நூற்றாண்டு நடைபெறுகிறது. அமெரிக்க அதிபர் நமக்கு உபதேசம் செய்வதை விட்டுவிட்டு அவரது நாட்டில் உள்ள இன பிரச்சனையை கவனிக்கட்டும் என்றார்.

சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிப்பதற்கு பெயர் போனவர் யோகி ஆதித்யநாத் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
BJP MP Yogi Adityanath told that if given permission he will install Gauri-Ganesh statue in every mosque.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X