For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'காஷ்புக்'... இது காஷ்மீரின் ஃபேஸ்புக்! தடையை உடைத்த பனிமலை இளைஞர்கள்

பிரபல சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் காஷ்மீரில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அம்மாநில இளைஞர்கள் புதியதாக 'காஷ்புக்' என்ற சமூக வலைத்தளங்களை உருவாக்கி பாராட்டுக்களை குவித்து வருகின்றனர்.

By Devarajan
Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலத்தில் ஃபேஸ்புக் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் சளைக்காத காஷ்மீர் மாநில இளைஞர்கள் 'காஷ்புக்' உருவாக்கிக் கலக்கியுள்ளனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஜம்மு காஷ்மீரில் வன்முறைக் கொழுந்துவிட்டு எரிந்தபோது பாதுகாப்பைப் பலப்படுத்திய போலீசார் , இணைய இணைப்புத் தொடர்புகளையும் துண்டித்தனர். ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதி சப்ஸர் பாட் இறந்த செய்தி பரவிய நேரம் அது என்பதால் மாநிலம் முழுக்க பதற்றம் பரவி இருந்தது..

ஆனால் இந்தக் குழப்பத்திற்கிடையே, இரண்டு இளைஞர்கள் தங்கள் ' தொழில்நுட்பம் சார்ந்த வணிக முயற்சிகளுக்கு' பயன்தரும் திட்டங்களில் மும்முரமாக இருந்து சாதித்துள்ளனர்.

 காஷ்புக்கின் நிறுவனர் வயது 15

காஷ்புக்கின் நிறுவனர் வயது 15

15 வயதான ஸியான் ஷாபிக் என்ற இளைஞர் இன்றுள்ள வெற்றிகரமான மாதிரிகளான பேஸ்புக், சீனாவின் வீச்சாட் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு, இரண்டாமாண்டு பொறியியல் பயிலும் உஷேய்ருடன் இணைந்து ஃபேஸ்புக்குக்கு மாற்றாக காஷ்மீருக்கென்று அவர் காஷ்புக்கை அவர் உருவாக்கியுள்ளார்.

 10 ஆயிரம் நண்பர்கள்

10 ஆயிரம் நண்பர்கள்

2017, ஏப்ரல் 26ம் தேதி சமூக ஊடகங்கள் தடை செய்யப்பட்டன. அதைத் தொடர்ந்து, அன்று மத்தியப்பொழுதில் இணையதளம் தொடங்கப்பட்ட நிமிடங்களிலிருந்து 10,000 க்கும் மேற்பட்ட பயனர்கள் காஷ்புக் (kashbook) தளத்தில் இயங்கிவருவதாக ஸியான் ஷாபிக் தெரிவிக்கிறார்.

 22 ஊடகங்கள் தடை

22 ஊடகங்கள் தடை

ஃபேஸ்புக் உள்ளிட்ட 22 சிறந்த சமூக ஊடகங்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் தடைசெய்யப்பட்டன என்பது கவனிக்கத்தக்கது. இதனால் 'காஷ்புக்' உருவாக்கப்பட்டதாக ஸியான் மேலும் கூறுகிறார்.

 தேச பக்திக்கு முன்னுரிமை

தேச பக்திக்கு முன்னுரிமை

காஷ்புக்கில் "எந்த நாட்டிற்கு எதிராகவும் தீங்குவிளைவிக்கும் பொருள்" என்று கருதப்படும் எதையும் அனுமதிப்பதில்லை என்பதை தன்னுடைய முக்கிய அறிவிப்பாக செய்துள்ளார் ஸியான்.

 கலக்கும் காஷ்மீர்வெப்.ஆன்லைன்

கலக்கும் காஷ்மீர்வெப்.ஆன்லைன்

உஸ்மான் தாரீன் என்பவர் நிறுவியுள்ள காஷ்மீர்வெப்.ஆன்லைன், ஒரு சமூக வலைதளமாக இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. இது போலீஸார் விசாரணையில் சிக்கியுள்ளது. ஆனாலும் அதை மறுத்து உஸ்மான் வெப்.லைனை பரபரப்பாக இயக்கி வருகிறார்.

 உஸ்மானுக்கு 16 வயது

உஸ்மானுக்கு 16 வயது

16 வயதேயாகும் உஸ்மான் தாரீன், தான் எட்டாம் வகுப்பில் இருந்து இதுபோன்ற தளம் உருவாக்க செயல்பட்டு வருகிறார். அடுத்து யூ டியூப் போன்ற வீடியோ வெளியிடும் இணையதளத்தை உருவாக்கும் திட்டத்தையும் வைத்துள்ளார்.

English summary
With Facebook banned, Kashmir youth developed a new social website called as ''Kashbook''
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X